பின்தங்கிய ஜப்பானிய நிறுவனங்கள்…
மின்சார கார் உற்பத்தியில் பல முன்னணி நிறுவனங்கள் இருந்தாலும் ஜப்பானிய கார் நிறுவனங்கள்தான் மின்சார கார் உற்பத்தியில் மிகவும் பின்தங்கியுள்ளன என தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக ஜப்பானின் சுசுக்கி, ஹோண்டா, டொயோடா மற்றும் மஸ்தா ஆகிய நிறுவனங்கள் மின்சார கார்கள் பற்றி குறைவாகவே யோசித்து வருகின்றன. காலநிலை மாற்றம் தொடர்பான உலகளாவிய பகுப்பாய்வில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக மஸ்தா, சுசுக்கி ஆகிய நிறுவனங்கள்தான் எரிபொருள் கார்களில் இருந்து மின்சார கார்களுக்கு மாற மிகவும் யோசிப்பதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் 3 ஆவது பெரிய விற்பனை சந்தை உள்ள இந்தியாவிலேயே அதிக பேட்டரி கார்கள்தான் விற்கப்பட்டு வரும் நிலையில் ஜப்பானில் கொள்கை ரீதியில் எரிபொருளில் இயங்கும் கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும், அதிகபட்சமாக ஹைபிரிட் வகைகளுக்குத்தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இன்ஃபுளுயன்ஸ் மேப் அமைப்பின் மார்ச் புள்ளி விவரத்தின்படி இந்திய கார் உற்பத்தியாளர்களான டாடா மோட்டார்ஸ் மகிந்திரா நிறுவனங்கள் பேட்டரி வாகனங்களை துரிதப்படுத்துவதாகவும், ஜப்பானின் சுசுக்கி, ஹோண்டா, டொயோட்டா ஆகிய நிறுவனங்களும் பேட்டரி வாகனங்களை ஒப்பிடுகையில் ஹைப்ரிட் வாகனங்களை உற்பத்தி செய்து வருகின்றன. FAME, என்ற லாபகர திட்டத்தை அதிகப்படுத்தவும் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்.