மின்சார வாகன கொள்கையில் மாற்றமில்லை..
இந்தியா அண்மையில் மின்சார வாகன கொள்கை ஒன்றை வரைவுபடுத்தியது. இந்நிலையில் இந்தியாவில் உற்பத்தியை செய்யத் துடிக்கும் டெஸ்லா நிறுவனம் ஏன் இந்தியாவிற்குள் வர முடியவில்லை என்று நிதி ஆயோக் அமைப்பின் தலைவரிடம் கேள்விகள் முன்வைக்கப்பட்டன. இதற்கு பதில் அளித்த அவர், இந்தியாவுக்கு என தனிப்பட்ட மின்சார வாகன கொள்கை உள்ளது. அதனை எந்த காரணத்துக்காகவும், எந்த நிறுவனத்துக்காகவும் மாற்ற இயலாது என்றார். இந்தியாவிற்குள் ஆலையை தொடங்க வேண்டுமானால் ஒரு சிலவற்றையெல்லாம் செய்து தர டெஸ்லா நிறுவனம் இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தது. 4150 கோடி ரூபாய் முதலீடு செய்வோருக்கு என பிரத்யேக கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. உள்ளூரில் 25 விழுக்காடு உதிரி பாகங்கள் தயாரிக்க வேண்டும், 5 ஆவது ஆண்டில் இந்த எண்ணிக்கையை 50 விழுக்காடாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட திட்டங்கள் அந்த புதிய கொள்கையில் இடம்பிடித்துள்ளன. 6484 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே வெளிநாடுகளில் இருந்து கார் நிறுவனங்கள் இறக்குமதியை செய்ய இயலும். கடந்த 5 ஆண்டுகளில் ஏராளமான பணிகள் நடந்திருப்பதாகவும், ஆட்டோமொபைல் துறையில் பல மாற்றங்கள் நடந்திருப்பதாகவும் கூறினார். இந்தியாவில் உள்ள ஏராளமான வாகனங்களில் மின்சார வாகனங்களாக மாற்ற , குறிப்பாக இருசக்கரம் மற்றும் 3 சக்கர வாகனங்கள்தான் மொத்த அளவில் முக்கால் பங்காக இருக்கிறது. 10,ஆயிரம் மின்சார பேருந்துகள் வாங்க, மத்திய அரசு 57,613 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதாகவும் அமிதாப் காந்த் தெரிவித்தார். இருசக்கரம், 3 சக்கர பேட்டரி வாகனங்கள் இந்தியாவில் அதிகரிக்கும் என்றும், முதலீடுகள் அந்தளவுக்கு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.