இந்திய பொறியாளர்களுக்கு சுந்தர் பிச்சை அறிவுரை..
செயற்கை நுண்ணறிவு நுட்பத்தில் இந்திய பொறியாளர்கள் முக்கியமான இடத்தில் இருப்பதாக ஆல்பபெட் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு நுட்பத்தில் இந்தியா முன்னோடியாக திகழும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். கூகுளின் தலைமை அலுவலகத்தில் இந்திய கண்டென்ட் கிரியேட்டர் வருணுக்கு சுந்தர் பிச்சை பேட்டி ஒன்றை எடுத்தார். அதில் இந்த தகவல்களை சுந்தர் பிச்சை பகிர்ந்து கொண்டார். இந்தியாவில் பல பணியாளர்கள் திறமையாக இருப்பதாகவும், அதே நேரம் அவர்களுக்கு தேவையான அடிப்படை அறிவு கற்றுத்தரப்படுவதில்லை என்றும் ஆதங்கம் தெரிவித்தார். 3 இடியட்ஸ் படத்தில் வரும் காட்சியை சுட்டிக்காட்டிய சுந்தர் பிச்சை, இந்திய பொறியாளர்கள் புதிய நுட்பத்தின் கோர் எனப்படும் கருவை ஆழ்ந்து புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். செயற்கை நுண்ணறிவு நுட்பத்தில் கூகுள் மற்றும் மைக்ரோசாஃப்ட் இடையே கடுமையான யுத்தம் நடந்து வரும் நிலையில், கூகுள் நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளை எடுத்து வருகிறது. செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி இந்தியாவை சந்தைபடுத்தும் பொருளாக மாற்றவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. செயற்கை நுண்ணறிவை ஆக்கபூர்வமாக பயன்படுத்தினால் மற்ற நாடுகளைவிட இந்தியாசிறப்பாக செயல்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.