மஸ்குக்கு எதிராக திரும்பிய பங்குதாரர்கள்..
மிகப்பெரிய அறிவியல் கண்டுபிடிப்பும், அட்டகாசமான தயாரிப்புமாக டெஸ்லாவின் கார்கள் திகழ்ந்து வருகின்றன. இந்நிலையில் அந்த நிறுவனத்தின் முதலாளியாக உள்ள எலான் மஸ்க் அண்மையில் இழப்பீடு அளிக்க திட்டமிட்டு இருந்தது. குறிப்பிட்ட அந்த இழப்பீட்டு தொகை சார்ந்த அம்சத்துக்கு டெஸ்லா நிறுவத்தின் பங்குதாரர்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மஸ்குக்கு எதிராக முதலீட்டாளர்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் அந்த பங்குதாரர்கள் முதலீட்டாளர்களை வலியுறுத்தியுள்ளனர். உலகளவில் டெஸ்லா நிறுவன கார்கள் விற்பனை சரிந்து வருகிறது. இந்தாண்டில் மட்டும் 30% அளவுக்கு அந்நிறுவனத்தின் பங்குச்சந்தை மதிப்பு வீழ்ச்சியை கண்டுள்ளது. மஸ்க் அண்மையில் அறிவித்துள்ள இழப்பீட்டு தொகை எந்த வகையிலும் ஏற்க முடியாது என்றும், வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மை இருக்காது என்றும் அந்த பங்குதாரர்கள் சுட்டிக்காட்டினர். மஸ்குக்கு எதிராக வாக்களித்தால் டெஸ்லா நிறுவனத்தை ஆட்டம் காண வைக்கலாம் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். டெஸ்லா நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவிற்கு மறுதேர்தல் நடத்துவது குறித்தும் வாக்களிக்க வேண்டும் என்று அந்த குழு, முதலீட்டாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது. வரும் ஜூன் 13 ஆம் தேதி நடக்க இருக்கும் ஆண்டுப்பொதுக்கூட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படும்என்றும் எதிர்பார்க்கப்படுகிறது