குடும்ப பிஸ்னஸின் முன்னுதாரணம்..
127 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட கோத்ரேஜ் குடும்பத்தில் அண்மையில் சொத்து பிரிக்கப்பட்ட விவகாரம் தேசிய அளவில் கவனிக்க வைத்த முக்கிய முன்னுதாரணமாக திகழ்கிறது. 1897-ல் சகோதரர்கள் அர்தேஷிர், பிரோஜ்ஷா புர்ஜோர்ஜி கோத்ரேஜ் ஆகியோரால் தொடங்கப்பட்டது கோத்ரேஜ் நிறுவனம். 4 தலைமுறைகளாக அந்த குடும்பத்தினர் வழி வழியாக நிளுவனத்தை நடத்தி வந்திருக்கின்றனர். பின்னர் அந்த நிறுவனம் கோத்ரேஜ் எண்டர்பிரைசர்ஸ் ஆகவும், கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ் ஆகவும் இரண்டாக உடைந்தது. இதில் ஒரு பிரிவிடம் ஏகப்பட்ட நிலங்களும், மற்றொரு பிரிவினரிடம் 5 பட்டியலிடப்பட்ட நிறுவனங்களும் இருந்தன. இந்த நிலையில் கோத்ரேஜ் குழுமத்துக்கு உள்ளேயே குட்டி குட்டி நிறுவனங்களின் உரிமையாளர்களாக அந்த குடும்பத்தின் வாரிசுகளும், அவர்களின் துணைகள் மற்றும் பிள்ளைகளும் வளர்ந்தனர். அர்தேஷிருக்கு குழந்தைகள் இல்லாததால் அவரின் குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களுக்கு நிறுவனத்தின் உரிமை சென்றது.
சொத்துகளை நிர்வகிப்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது. குடும்ப பிசினஸ் நடத்தி வரும்போது, யாருக்கு எந்த நிறுவனத்தை தருவது என்பதில்குழப்பம் நிலவியது. ரியல் எஶ்டேட் துறையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரச்சனை எழுந்தது. இப்படி இருந்தபோதிலும் குடும்பத்தினருக்கு மிகச்சரியாக சொத்துகள் பிரித்து அளிக்கப்பட்டது. நூற்றாண்டு பெருமை கொண்ட கோத்ரேஜ் குடும்பத்தில், தற்போதுள்ள தலைமுறையினர், அவர்களின் முன்னோரின் பெருமைகளை கட்டிக்காப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.