ரிலையன்ஸிடம் கோரிக்கை வைத்த மத்திய அரசு..
இந்தியா சிக்கலில் இருந்தபோது, ரஷ்யாதான் பல நேரங்களில் உதவியிருக்கிறது என்றால் அது மிகையல்ல.
இந்த சூழலில் இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கும் அண்மையில் மத்திய அரசு கோரிக்கை ஒன்றை வைத்தது. அதில், பொதுத்துறை நிறுவனங்களும், ரிலையன்ஸும் இணைந்து நீண்ட நாட்களுக்கு கச்சா எண்ணெயை தர ரஷ்யாவிடம் வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலையில் இருந்து பாதுகாக்கும் வகையில்,இந்த கோரிக்கையை மத்திய அரசு முன்வைத்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கத் தொடங்கியது முதல் இந்தியா தான் ரஷ்யாவிடம் அதிக கச்சா எண்ணெயை வாங்கியுள்ளது. ரஷ்யாவிடம் யாரும் கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்று அமெரிக்கா தடை விதித்த போதும், இந்தியாவுக்கு அந்த தடை பொருந்தவில்லை. இந்நிலையில் மத்திய அரசு நிறுவனங்களும் , ரிலையன்ஸும் இணைந்து ரஷ்யாவிடம் பேரம் பேசவேண்டும் என்றும் அந்த அதிகாரி தகவல் தெரிவித்துள்ளது. ஒரு தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையிடம் அரசு சென்று பேரம் பேசச் சொல்வது மிகவும் அரிதான ஒரு சம்பவம் ஆக பார்க்கப்படுகிறது.
அரசு நிறுவனங்கள் ஒரு பேரலுக்கு 5 அமெரிக்க டாலர்கள் சலுகை கேட்கும் நிலையில் மாஸ்கோவெறும் 3 டாலர்கள்தான் ஒரு பேரலுக்கு தர முன்வந்துள்ளது. நீண்டகாலம் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு இந்தியன் ஆயில் மட்டும்தான் ஒப்பந்தம் வைத்திருந்தது, அதுவும் கடந்த மார்ச் மாதமே காலாவதியாகிவிட்டது. இந்நிலையில் மீண்டும் டீல் படியுமா? பேச்சுவார்த்தைக்கு ரிலையன்ஸ் வருமா என்பதை காத்திருந்து பார்க்க வேண்டும்