எப்படி 2.1 லட்சம் கோடி தர முடியும்?
எகனாமிக் டைம்ஸ் நவ் பத்திரிகையின் ஆசிரியரான சாமிநாதன் ஐயர் அண்மையில் ரிசர்வ் வங்கியின் டிவிடண்ட் அளிக்கும் முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.1 லட்சம் கோடி ரூபாய் என்பது 0.7 விழுக்காடாகும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் நிதி பற்றாக்குறை 5.8 விழுக்காடில் இருந்து 4.5 விழுக்காடாக குறைக்க நிதியமைச்சர் திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். ரிசர்வ் வங்கி தர இருக்கும் உபரி நிதியான டிவிடண்ட் முழு பட்ஜெட்டில் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். முழு பட்ஜெட் வரும் ஜூலையில் வெளியிடப்பட இருக்கிறது. ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர், பதவி விலகியுள்ள நிலையில் நிதி சந்தையில் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் சுவாமிநாதன் கூறியுள்ளார். 1லட்சம் கோடி ரூபாய்தான் டிவிடண்ட்டாக கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் எப்படி 2.1லட்சம் கோடி ரூபாய் கிடைக்கும் என்பது வியப்பாகவே இருக்கிறது என்றும் சுவாமிநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். அமெரிக்க பெடரல் ரிசர்வின் சூழலுக்கு தகுந்தபடிதான் பத்திர சந்தை இருக்கும் என்றும் சுவாமிநாதன் கூறியுள்ளார். அமெரிக்க பெடரல் ரிசர்வ் என்ன செய்யப்போகிறது என்பதை காத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்றும் சுவாமிநாதன் கூறியுள்ளார். அனந்த நாகேஸ்வரன் 6.5 விழுக்காடு வளர்ச்சி குறித்து கருத்து தெரிவித்தார். முதல் 3 காலாண்டில் 8 விழுக்காடு வளர்ச்சி இருந்த நிலையில் 4 ஆவது காலாண்டிலும் அதிகம் வளர்ச்சி இருந்தது. இது சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார். வருவாய் அதிகரிக்கும் நிலையில் அரசு சார்பில் செலவுகளும் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.