3 துறைமுகங்களை குறிவைக்கும் அதானி..
இரும்பு தாது, நிலக்கரி ஏற்றுமதி அதிகரித்துள்ள நிலையில், அதானி குழுமம், 3 சர்வதேச துறைமுகங்களை குறிவைத்துள்ளது. 3 பில்லியன் அளவுக்கு நிதியை அந்நிறுவனம் பெற்றுள்ளது. இந்தியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே மத்திய மற்றும் மேற்கு ஆசியைவையும் இணைக்கும் வகையில் புதிய துறைமுகங்கள் அமைய இருக்கிறது. இந்த புதிய துறைமுகங்கள் மூலம் 600 மில்லியன் மெட்ரிக் டன் கொள்ளளவை 800 மில்லியன் மெட்ரிக் டன் ஆக அடுத்த இரண்டு ஆண்டுகளில் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. ஐரோப்பா, ஆப்ரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் புதிய துறை முகங்கள் அமைய இருக்கின்றன.
தற்போது துறைமுக வணிகத்தில் 10 விழுக்காடு உள்ள நிலையில் அடுத்த 3 ஆண்டுகளில் 20 முதல் 25 விழுக்காடாக உயர்த்தவும் திட்டம் உள்ளதாம். இஸ்ரலே், இலங்கை, இந்தோனேசியா, தான்சானியா, ஆஸ்திரேலியாவில் அதானி குழுமம் தனது துறைமுகங்களை இயக்கி வருகிறது. 2025ஆம் ஆண்டுக்குள் 30 முதல் 31,000 கோடி வருவாய் ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளது.. ஆப்கானிஸ்தான், தெற்கு ஈரான் ஆகிய பகுதிகளிலும் துறைமுகம் அமைக்கும் பணிகளும் தீவிரமடைந்துள்ளன. இந்தியாவில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு உடனடியாக பொருட்களை எடுத்துச்செல்லும் வகையில் சபார் பகுதியில் சிறப்பு சாலையும் அமைக்கப்பட இருக்கிறது. இந்தியாவுக்கும் -மத்திய கிழக்கு-பொருளாதார வழத்தடம் அமைக்க சிறப்பு வழித்தடமும் அமைக்க ஜி 20 நாடுகளிடம் ஒப்புதல் அளிக்கப்பட்டது.