2.1 லட்சம் கோடி டிவிடண்ட் தரப்பட்டது ஏன்?
ரிசர்வ் வங்கியிடம் இருந்த உபரி நிதி2.1 லட்சம் கோடியை மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி அளித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் வருவாய் என்பது வெளிநாட்டு கரன்சியை வைத்திருப்பதால் கிடைக்கிறது. அமெரிக்க டாலர்கள் மட்டுமின்றி, யூரோ, ஸ்விஸ் பாண்டுகள் வடிவிலும் வெளிநாட்டு பணம் ரிசர்வ் வங்கியிடம் உள்ளது. ஃபெட் ஃபண்ட் ரேட் விகிதம் 2023 நிதியாண்டில் 2.5 விழுக்காடாக இருந்தது. இது 24 நிதியாண்டில் சராசரியாக 5 விழுக்காடாக உயர்ந்துள்ளது. மத்திய வங்கியின் வெளிநாட்டு கையிருப்பு 570 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்திருக்கிறது. வெளிநாட்டு பண கையிருப்பு 47.2 டிரில்லியன் இந்திய ரூபாயாக உயர்ந்துள்ளது. அமெரிக்க டாலர்களை அதிகம் விற்பதால்தான் ரிசர்வ் வங்கிக்கு அதிக வருவாய் கிடைத்திருக்கிறது. ரிசர்வ் வங்கியின் அமெரிக்க டாலர்கள் விற்பனையின் மூலம் 153 பில்லியன் அமெரிக்க டாலர்களை விற்றுள்ளன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வாங்கும் நிலையில் ஒரு டாலர் 75 ரூபாயாக இருந்தது. இப்போது விற்கும் விலை ஒரு டாலருக்கு 83 ரூபாயாக இருக்கிறது. ஒரு டாலருக்கு 8 ரூபாய் வரை ரிசர்வ் வங்கிக்கு லாபம் கிடைத்திருக்கிறது. அமெரிக்க டாலர்களை விற்பனை செய்ததால் மட்டுமே 1.2 டிரில்லியன் ரூபாய் இந்தியாவுக்கு வருவாயாக கிடைக்கிறது.
தங்கம் கையில் இருந்ததை விற்றதால் மட்டும் ரிசர்வ் வங்கிக்கு 63,500 கோடி ரூபாய் வருவாயாக கிடைத்திருக்கிறது. அதிக டிவிடண்ட் கிடைத்தால் மத்திய அரசு அதிக செலவு செய்ய இயலும்.பத்திர சந்தையில் 10 ஆண்டுகள் வருவாய் 7 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது.