9 நாட்களில் 3,700 புள்ளிகள் உயர்வு..
இந்தியாவில் பங்குச்சந்தைகளுக்கும் தேர்தலுக்கும் தொடர்பு உள்ளது. ஏன் இதை சொல்கிறோம் எனில், இந்திய பங்குச்சந்தைகள் முதல்கட்ட வாக்குப்பதிவான ஏப்ரல் 19ஆம் தேதி புதிய உச்சங்களை தொட்டது. அதே நேரம் மே 13 ஆம் தேதி நான்காம் கட்ட வாக்குப்பதிவின்போது 71,871 புள்ளிகள் என்ற புதிய குறைந்தபட்ச அளவும் பதிவானது, இந்நிலையில் 9 வேலை நாட்களில் இந்திய சந்தைகளில் 3 ஆயிரத்து 700 புள்ளிகள் ஏற்றம் பெற்றுள்ளன. ஜூன் 1 ஆம் தேதி வாக்குப்பதிவுக்கு பிந்தயை கருத்துக்கணிப்புகள் மற்றும் ஜூன் 4 ஆம் தேதி பொதுத்தேர்தல் முடிவுகள் வரும் வரை கூட முதலீட்டாளர்களால் காத்திருக்க முடியவில்லை. அண்மையில் தனியார் வணிக பத்திரிகைக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, ஜூன் 4 ஆம் தேதி இந்திய பங்குச்சந்தைகளும், பாஜகவும் புதிய உச்சம் தொடும் என்றார். பங்குச்சந்தைகளில் மிகப்பெரிய ஏற்றம் 4 ஆம் தேதி இருக்கும் என்றும் தெரிவித்தார். இந்திய பொதுத்தேர்தலில் பாஜக 300க்கும் அதிகமான இடங்களை பிடிக்கும் என்று சில கருத்துக்கணிப்புகளும் கூறுகின்றன. 290க்கும் அதிகமான சீட்களை பாஜக பிடித்தால்கூட, பங்குச்சந்தையில் மாற்றம் ஏற்படவாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை பங்குச்சந்தையில் சாதகமான சூழல் நிலவாத பட்சத்தில் 15 விழுக்காடு வரை வீழ்ச்சி ஏற்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மே மாதத்தில் மட்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 28 ஆயிரம் கோடி ரூபாயை வெளியே எடுத்துள்ளனர். நடுத்தர பங்குகள் 66 விழுக்காடு உயர்ந்திரக்கிறது. அதே நேரம் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 2023 முதல் 25 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது.