ஒரு நிமிடத்துக்கு 90 டிஷர்ட் விற்பனை..
டாடா நிறுவனத்தின் பட்ஜெட் துணிக்கடையான சூடியோ இந்தியர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. வெஸ்ட்சைடு என்ற பிராண்டைவிட டாடாவின் zudio நிறுவனம் அசத்தலாக துணிகளை விற்று வருகிறது. 2023-24 நிதியாண்டில் வெஸ்ட் சைடு பிராண்டுக்கு 91 நகரங்களில் 232 கடைகள் உள்ளன. அதே நேரம் 2016-ல் ஆரம்பிக்கப்பட்ட சூடியோ நிறுவனத்துக்கு 161 நகரங்களில் 545 கடைகள் உள்ளன. 2024 நிதியாண்டில் மட்டும் 46 புதிய நகரங்களில் சூடியோ துணிக்கடை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஒரு நிமிடத்துக்கு 90 டீஷர்ட்களை அந்த பிராண்ட் விற்று வருகிறது. ஒரு மணி நேரத்துக்கு 20 டெனிம்கள், ஒரு மணி நேரத்துக்கு 19 பர்ஃபியூம், 17 லிப்ஸ்டிக்களும் விற்று வருகின்றன. எளிதாக மக்கள் வாங்கும் அளவிலான விலை, எளிதாககிடைக்கும் துணிகள் மற்றும் ஈர்க்கும் வடிவமைப்பு ஆகியவை இந்த பிராண்டை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியுள்ளது. ஒரு துணிக்கடையின் சராசரி அளவு 10 ஆயிரம் சதுர அடியாக இருக்கிறது. ஒரு புதிய சுடியோ ஸ்டோரை தொடங்க 3 முதல் 4 கோடி ரூபாய் போதுமானதாக இருக்கிறது. 2024 நிதியாண்டில் மட்டும் சுடியோவின் தாய் நிறுவனமான ஹைப்பர் மார்கெட் நிறுவனம் 192.33 கோடி ரூபாய் வருவாயை பெற்றுள்ளது. தொடர்ந்து உயர்ந்து வரும் இந்த நிறுவனத்தின் எண்ணிக்கை சந்தையில் தனி கவனம் பெற்று வருகிறது.