டெலிகாம் நிறுவனங்களுக்கு அரசு கோரிக்கை..
இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா மற்றும் பிஎஸ் என்எல் ஆகிய 4 பிரதான சிம்கார்ட் நிறுவனங்கள் மட்டும்தான் உள்ளன. இந்நிலையில் இந்த நிறுவனங்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களுக்கு வரும் தொலைபேசி அழைப்புகளில் மோசடியானவற்றை டெலிகாம் நிறுவனங்களே தடுத்து நிறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. இது போன்ற போலியான வெளிநாட்டு அழைப்புகளால் சைபர் குற்றங்களும் நிதி மோசடிகளும் நடப்பதாகவும் அதனை தடுக்கும் நோக்கிலேயே இந்த சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் அரஸ்ட், ஃபெட் எக்ஸ் மோசடி, உள்ளிட்ட மோசடிகள் அதிகரித்து வருவதால் மத்திய அரசு துணிச்சலுடன் இந்த சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. 6.80 லட்சம் மொபைல் இணைப்புகள் போலியானவை என்று மத்திய அரசு எளிதாக கண்டுபிடித்துவிட்டதாகவும்,இதனை கண்டுபிடிக்க செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட்டதாகவும் அரசு விளக்கியுள்ளது.