ரிசர்வ் வங்கி அதிரடியால் முதலீட்டாளர்கள் கவனம்…
ரிசர்வ் வங்கியின் அடுத்தடுத்த கட்டுப்பாடுகளால் நிதிநுட்ப துறைகளில் முதலீடு செய்வோர் சற்று தயக்கம் காட்டி வருகின்றனர்.
நிதிநுட்ப நிறுவங்கள் மீதான முதலீடுகள் கடந்தாண்டு 1572 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இந்நிலையில் 2024 ஆண்டின் முதல் 4 மாதங்களில் மட்டும் 203 மில்லியன் டாலர்கள் முதலீடாக கிடைத்துள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட வகையில் மட்டுமே வளரச்சி இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 12 மாதங்களில் மட்டும் மேடிபிஎம் பேமண்ட் வங்கி உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்தது. கடந்தாண்டு நவம்பரில் நிதி நிறுவனங்களுக்கு ரிஸ்க் வெயிட் வைத்தது, இதுபோன்ற சவாலான நேரங்களில் முதலீட்டை சற்று தள்ளிப்போடும் முடிவில் முதலீட்டாளர்கள் உள்ளனர். இதனால் நிதி நுட்ப நிறுவனங்களில் போட இருந்த பணத்தை நிறுவனங்கள், சிறு குறு நிறுவனங்களின் மீது முதலீடு செய்யத் தொடங்கியுள்ளன. ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் காரணமாக தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவேண்டியுள்ளதாகவும் அவர்கள் புலம்புகிறார்கள். அதேநேரம் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் காரணமாக கட்டுக்கோப்பான வணிகம் சாத்தியப்படும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.