புதிய அப்டேட் கொடுத்த நிதியமைச்சர்..
சிறு குறு நிறுவனங்கள் தேவைப்பட்டால் 45 நாட்களில் பணம் தரும் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவர இசைவு தெரிவிக்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். வரும் ஜூலை மாதம் புதிய அரசாங்கம் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறது. அதில் குறிப்பிட்ட இந்த கோரிக்கையை பரிசீலிப்பதாகவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். லூதியானாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,வரிச்சலுகைகள் அளிக்க அரசு பரிசீலிப்பதாகவும், சரியான நேரத்தில் எம்எஸ்எம்.இகள் பணத்தை செலுத்தினால் அதற்கு சிறப்பு சலுகை அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 45 நாட்களில் பணம்தரும் வகையிலான திட்டம் வேண்டுமெனில் அதனை பரிசீலிப்பதாகவும், அதே நேரம் வேண்டாம் என்றால் அதனை எப்படி பலனுள்ளதாக மாற்றுவது என்பது குறித்து பணிகள் நடத்தப்படும் என்றும் நிதியமைச்சர் கூறினார். வருமான வரி சட்டம் 43பி எச் கூறும் விதிப்படி, சிறுகுறு நிறுவனங்களுக்கு பெரிய நிறுவனங்கள் 45 நாட்களில் பணம் தரவில்லை என்றால், பெரிய நிறுவனத்துக்கு அதிக வரி விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சில நிறுவனங்கள் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதே நேரம் புதிய விதி அமலானால் அது சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வாழ்க்கையையே மாற்றும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அதே நேரம் 45 நாட்களில் பணம் அளிக்கும் திட்டம் அமலானால், சிறு குறு நிறுவனங்களுக்கு பதிலாக மற்ற நபர்களிடம் பெரிய நிறுவனங்கள், பொருளை பெற்றுக்கொண்டு காலதாமதமாக பணம்த ரவும் வாய்ப்புள்ளதாக, சிறு குறு நிறுவனங்கள் அச்சம் தெரிவிக்கின்றன