இந்தியாவுக்கு வரும் 100 டன் தங்கம் ..
பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு 100 டன் தங்கத்தை இறக்குமதி செய்ய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. 1991 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய ரிசர்வ் வங்கி இத்தனை பெரிய தங்கத்தை இறக்குமதி செய்கிறது. இனி வரும் நாட்களில் பிரிட்டனில் இருந்து இன்னும் அதிகமாக தங்கம் இறக்குமதி செய்யப்பட இருக்கிறது. மார்ச் மாத இறுதியில் ரிசர்வ் வங்கி தரவுகளின்படி 822.1 டன் தங்கம் உள்ளது. இதில் 413.8 டன் தங்கம் வெளிநாடுகளில் உள்ளன. கடந்தாண்டு 27.5 டன் தங்கமும் கடந்த நிதியாண்டில் வாங்கப்பட்டது. தங்கம் வாங்குவதை ரிசர்வ் வங்கி, கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருகிறது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு 200 டன் தங்கத்தை ரிசர்வ் வங்கி வாங்கியது. நிதியமைச்சகம், ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசின் துறைகள் இணைந்து இந்த தங்கத்தை இந்தியாவிற்கு கொண்டுவருகிறது. சிறப்பு விமானம் மூலம் இந்த தங்கம் இந்தியாவுக்கு வர இருக்கிறது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கம் மும்பையில் உள்ள மின்ட் சாலையிலும் நாக்பூரிலும் ரிசர்வ் வங்கியின் சேமிப்புக் கிடங்குகளில் வைக்கப்பட இருக்கிறது.