ரிசர்வ் வங்கி தங்கத்தை எப்படி நிர்வகிக்கிறது.
2023-24 நிதியாண்டில் ரிசர்வ் வங்கி 27.47 டன் தங்கத்தை தனது சேமிப்பில் சேர்த்துள்ளது. இதனால் ரிசர்வ் வங்கியின் சேமிப்பு 822 டன் தங்கமாக உயரந்துள்ளது. 309 டன் தங்கத்தை ரூபாய் நோட்டு அச்சடிக்கும் பணிக்காக இந்தியா எடுத்து வைத்துள்ளது. வெளிநாடுகளில் 514.07 டன் தங்கம் உள்ளது. ரிசர்வ் வங்கியிடம் இருக்கும் தங்கத்தின் திப்பு 52.67 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. இதனால் இந்தியாவிந் வெளிநாட்டு பண கையிருப்பு 646.41 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்திருக்கிறது. வெளிநாட்டு முதலீடுகள், தங்கம், கடன்கள் உள்ளிட்டவையாக 7.02 லட்சம் கோடி ரூபாயை ரிசர்வ் வங்கி வைத்திருக்கிறது. இது மட்டுமின்றி பிரிட்டனில் இருந்து 100 டன் தங்கத்தை ரிசர்வ் வங்கி இந்தியாவுக்கு எடுத்து வருகிறது. கடந்த 1991 ஆம் ஆண்டுக்கு பிறகு ரிசர்வ் வங்கி இத்தனை பெரிய தங்கத்தை இந்தியாவுக்கு எடுத்து வருகிறது. வரும் மாதங்களில் தங்கத்தின் மீது ரிசர்வ் வங்கி அதிக முதலீடுகளை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க டாலர்கள் மீதான நம்பிக்கை குறைவதும், கடந்தாண்டு ஜனவரியில் அமெரிக்க பத்திரங்களின் விகிதம் 50.1 விழுக்காடு இருந்த நிலையில் , இந்தாண்டு இந்த விகிதம் 47.2 விழுக்காடாக ஜனவரி மாதம் குறைந்திருக்கிறது.