டாடாவுக்கும் எஸ்பிக்கும் பிரச்சனையை முடிப்பது எப்படி ..
இந்தியாவின் இரண்டு மிகப்பெரிய நிறுவனங்களான டாடா குழுமமும் எஸ்பி குழுமமும் சர்ச்சையில் உள்ளன. ஒரு காலத்தில் இரு நிறுவனங்களுக்கும் இடையே நல்ல நட்புறவு இருந்தது. சைரஸ் மிஸ்டிரி கடந்த 2016-ஆம் ஆண்டு டாடா குழுமத்தின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு இரு நிறுவனங்களுக்கும் இடையே பனிப்போர் நீடித்து வருகிறது. தன் வசம் இருக்கும் 18.5 விழுக்காடு பங்குகளை எஸ்பி குழுமம் அடகு வைத்து 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பணமாக மாற்ற முயற்சித்து வருகிறது. டாடா டிரஸ்ட் நிறுவனத்தில் 66விழுக்காடு பங்குகள் உள்ளன. எஸ் பி குழுமம் இந்த பங்குகளை விற்கவில்லை என்றும் அதே நேரம் அடகுதான் வைத்திருப்பதாகவும் விளக்கம் அளித்துள்ளது. இந்நிலையில் இருதரப்புக்கும் இடையே வார்த்தை போர் நீடித்து வந்தது. இப்போது வார்த்தைப் போர் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. முறையான ஒப்பந்தம் இரு நிறுவனங்களிடமும் இல்லாமல் இருப்பதும், பங்குச்சந்தையில் பெரிய கட்டமைப்பு இல்லாததும் முக்கிய காரணிகளாக கூறப்படுகிறது. டாடா குழுமம் முறையாக பங்குகளின் பெயர் மாற்றத்தை செய்யவேண்டும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். டாடா குழுமத்தின் பங்குகளை வேறு நபர்களுக்கு அளிப்பது டாடா குழுமத்துக்கு பிடிக்கவில்லை என்றும், எஸ்பி குழுமம் கடனை வேறு வகையில் அடைக்கலாம் என்றும் யோசனை தெரிவிக்கின்றனர். எஸ்பி குழுமம் அடகு வைத்தது செல்லும் என்று ஒரு தரப்பினரும், செல்லாது என்று மற்றொரு தரப்பு நிபுணர்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.