உலகின் 2 ஆவது பெரிய நிறுவனம்..
கிராபிக்ஸ் உள்ளிட்ட தத்ரூபமான காட்சிகளை செயல்படுத்தும் கருவிகளை உருவாக்கும் நிறுவனம் என்விடியா..
இந்த நிறுவனம்தான் உலகின் இரண்டாவது பெரிய மதிப்புமிக்க நிறுவனமாக மாற இருக்கிறது. சாட் ஜிபிடி உள்ளிட்ட உயர் தொழில்நுட்பங்களை அநாயாசமாக கையாளும் திறன் கொண்டதாக இந்நிறுவன சிப்கள் உள்ளன. கடந்த ஓராண்டில் மட்டும் இந்த நிறுவன பங்குகள் மும்மடங்கு அதிகரித்து 2.68 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்திருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் கடந்தாண்டு சிப் உற்பத்தி பாதிப்பு மற்றும் சீனாவில் கடும் சரிவு உள்ளிட்ட காரணிகளால் பின்னடைவை சந்தித்தன. கடந்த சில ஆண்டுகளாக அபார வளர்ச்சி அடைந்திருந்த ஆப்பிள் நிறுவனம், தற்போது சரிவை கண்டு வருகிறது. அதே நேரத்தில் என்விடியா நிறுவனம் அசாத்திய வளர்ச்சியை பெற்று வருகிறது. அமெரிக்க பங்குச்சந்தைகளில் இந்த நிறுவன பங்குகளுக்கு அதிக கிராக்கி உள்ளது. ஒரே ஆண்டில் இந்நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு 1 டிரில்லியனில் இருந்து 2 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்திருக்கிறது. என்விடியா நிறுவன ஈடிஎஃப் பங்குகள் சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. உலகளவில் மைக்ரோசாஃப்ட் முதல் இடத்திலும், ஆப்பிள் சரிவை கண்டதால் இரண்டாம் இடத்திலும் உள்ள நிலையில், தற்போது செல்லும் வேகத்தை பார்த்தால் என்.விடியா நிறுவனம்தான் விரைவில் 2 ஆவது இடத்தை எட்டும் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.