30 லட்சம் கோடி ரூபாய் காலி..
இந்திய பங்குச்சந்தைகள், ஜூன் 4 ஆம் தேதி மிகப்பெரிய சரிவை கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 4 ஆயிரத்து 389புள்ளிகள் சரிந்து 72,079 புள்ளிகளாக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 1,379 புள்ளிகள் குறைந்து 21,884 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது., இந்திய பங்குச்சந்தைகளில் 30 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பணத்தை முதலீட்டாளர்கள் இழந்தனர். 425.91 லட்சம் கோடி ரூபாயாக இருந்த சந்தை மூலதனம் நேற்று ஒரே நாளில் 395.99 லட்சம் கோடீ ரூபாயாக வீழ்ந்தது. தேசிய பங்குச்சந்தையில் HUL, Nestle, Britannia Industries, Hero MotoCorp, Tata Consumer Products ஆகிய நிறுவன பங்குகள் விலை உயர்ந்து முடிந்தன. Adani Ports, Adani Enterprises, ONGC, NTPC.,SBI உள்ளிட்ட நிறுவன பங்குகள் மிகப்பெரிய சரிவை கண்டன. சந்தையில் வேகமாக விற்பனையாகும் பொருட்கள் தவிர்த்து மற்ற அனைத்து துறை பங்குகளிலும் பெரிய வீழ்ச்சி காணப்பட்டது. ரியல் எஸ்டேட், உலோகம், எண்ணெய் மற்றும் எரிவாயு, ஆற்றல் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் 10 விழுக்காடு வரை சரிந்தன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை ஒரு சவரன் 632 ரூபாய் விலை உயர்ந்து 53ஆயிரத்து 960 ரூபாயாக விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் 6745ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை, கிராமுக்கு 1 ரூபாய்2 0 காசுகள் உயர்ந்து 98ரூபாய் 50 காசுகளாக விற்கப்படுகிறது.. கட்டி வெள்ளி விலை ஒரு கிலோ ஆயிரத்து 200 ரூபாய் உயர்ந்து 98 ஆயிரத்து 500 ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மற்றும் பொருட்களுக்கு தற்போது 3 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இது மட்டுமின்றி மேலே சொன்ன விலைகளுடன் செய்கூலி, சேதாரம் ஆகியவையும் சேர்க்க வேண்டும், இவை இரண்டும் கடைக்கு கடை மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.