பிரிந்து செல்ல ஐடிசி பங்குதாரர்கள் ஒப்புதல்..
புகையிலை, பிஸ்கட் முதல் பிரபல ஹோட்டல் வரை கொண்டுள்ளது ஐடிசி குழுமம். இந்த நிறுவனத்தில் இருந்து ஐடிசி ஹோட்டல்களை பிரிக்கும் வகையிலான விண்ணப்பத்துக்கு அந்த நிறுவன பங்குதாரர்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். ஐடிசி பங்குகளை வைத்திருந்த பங்குதாரர்களுடன் வியாழக்கிழமை ஒரு கூட்டம் நடந்தது இதில் 99.6 விழுக்காடு பங்குதாரர்கள் ஐடிசி ஹோட்டல்ஸை தனியாக இயக்க ஒப்புதல் அளித்துள்ளனர். அண்மையில் பங்குதாரர்களை அழைத்து ஒரு கூட்டம் நடத்த தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் அறிவுறுத்தியிருந்தது. அதன்படியே கூட்டம் நடந்தது. ஐடிசியில் இருந்து ஐடிசி ஹோட்டல்ஸை மட்டும் பிரிக்கும் பணி முடிவடைந்ததும் விரைவில் பங்குச்சந்தைகளில் அது பட்டியலிடப்பட இருக்கிறது.
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ஐடிசி நிறுவனத்தில் இருந்து ஐடிசி ஹோட்டல்ஸை பிரிக் பணிகள் நடைபெற்றன.
இந்திய போட்டி ஆணையம் இதற்கு இசைவு தெரிவித்திருந்தது. ஐடிசி நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட உடன் ஐடிசி நிறுவனம் 40 விழுக்காடு பங்குகளையும், மீதம் 60 விழுக்காடு பொதுமக்களுக்கும் பங்குகளாக அளிக்கப்பட இருக்கிறது.
ஐடிசி ஹோட்டல்கள் புதிய ஹோட்டல்களுக்கு முன்பு ஐடிசிஎன்ற பெயரை பயன்படுத்திக்கொள்ள ஐடிசி குழுமம் ஒப்புதல் அளித்துள்ளது. ஈக்விட்டி மற்றும் கடன்கள் மூலம் மூலதனத்தை பெறவும் ஐடிசி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முதலீட்டாளர்களையும் வரவேற்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.