மோசமாக நடத்துவதாக மிகப்பெரிய நிறுவனத்தின் மீது புகார்..
இந்தியாவில் முன்னணி மின்வணிக நிறுவனங்களில் ஒன்றாக திகழ்வது அமேசான் நிறுவனம். இந்த நிறுவனம் தனது பணியாளர்களை மோசமாக நடத்துவதாக புகார் எழுந்துள்ளது. இந்தியாவின் சில இடங்களில் 50 டிகிரி செல்சியஸ் வரை வெயில் வாட்டி வருகிறது. இந்த வெயிலிலும் ஊழியர்கள் புழுக்கமான இடங்களில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.
அமேசான் நிறுவன கிட்டங்கிகளில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் மிகமோசமான காலநிலைகளை அனுபவிப்பதாக புகார் எழுந்துள்ளது. ஹரியானா மாநிலம் மனேசர் பகுதியில் போதுமான காற்றோட்டமோ, குளிர் சாதன வசதியோ இல்லை என்றும் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு கடுமையான வெப்பத்தில் பணியாற்றி வருவதாகவும் ஊழியர்கள் குமுறலை வெளிப்படுத்துகின்றனர். இதே நிலையைத்தான் ஒவ்வொரு நாளும் 2 ஆயிரம் பணியாளர்கள் அனுபவித்து வருகின்றனர். ஒரு நாளில் 10 மணி நேரம் உட்கார கூட நேரமில்லாமல் வேலை செய்வதாகவும் அவர்கள் சம்பளம் வெறும் 10 ஆயிரம் ரூபாய் என்றும் கூறப்படுகிறது. மேலும் போதுமான கழிப்பிட வசதி கூட இல்லை என்றும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அதிகாலை 5 மணிக்கு வேலைக்கு வந்து,10-12 மணி நேரம் வேலைசெய்வதாகவும், விதிகளுக்கு உட்பட்டு முறையான ஓய்வு கூட அளிக்கப்படுவதில்லை என்றும், சில பணியாளர்கள் கிடங்குக்குள்ளேயே 25 கிலோமீட்டர் தூரம் நடப்பதாகவும் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். திடீரென குடும்ப சூழலுக்காக விடுப்பு எடுத்தாலும் வேலை போய்விடுகிறது என்று அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் பாதுகாப்பு மட்டும் ஊழியர்களின் நல்ல பணி சூழல்தான் முக்கியம் என்று அமேசான் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. புகார் அளிக்கப்படும் அமேசான் தரப்பும், தொழிலாளர் நல அமைச்சகம் தரப்பில் இருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் பணியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். நடுநடுவே பிரேக் கூட எடுக்காமல் வேலை வாங்குவதாகவும் ஊழியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்