மீண்டும் நிதியமைச்சர் ஆனார் நிர்மலா..
அண்மையில் முடிந்த பொதுத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு தனிப்பெரும்பான்மையை மக்கள் தீர்ப்பாக அளிக்கவில்லை. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. டெல்லியில் அண்மையில் மோடி மீண்டும் பதவி ஏற்றார். இந்த நிலையில், கடந்த ஆட்சியில் 5 முழு ஆண்டுகள் நிதியமைச்சராக பணியாற்றிய நிர்மலா சீதாராமன் மீண்டும் நிதியமைச்சர் ஆக அறிவிக்கப் பட்டது. மன்மோகன்சிங், அருண் ஜேட்லி ஆகியோருக்கு பிறகு ஒரு ஆட்சியின் முழுமையாக நிதியமைச்சர் பதவியை நிறைவு செய்தவர் என்ற பெருமையை நிர்மலா பெற்றுள்ளார். மதுரையில் பிறந்த அவர், திருச்சியில் இளநிலை பொருளாதாரம் படித்தார். பின்னர் டெல்லியில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.பில் படித்தார். பிரிட்டனிலும் பணியாற்றிய அவர், பின்னர் தீவிர அரசியலில் ஈடுபட்டார். 64 வயதாகும் நிர்மலா, பொது வாழ்விலும் ஈடுபட்டு வருகிறார்.