கச்சா எண்ணெய் விலை நிலவரம் என்ன?
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயரத் தொடங்கியிருக்கிறது. இந்தாண்டு உலகம் முழுவதும் பொருளாதார நிலைமை சீராக இருப்பதால் எண்ணெய் தேவையும் உயரும் என்று ஓபெக் நாடுகள் கணித்துள்ளன. கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதிக்கு பிறகு கச்சா எண்ணெய் சந்தை நேற்று நல்ல ஏற்றத்தை கண்டது. கிட்டத்தட்ட 2 விழுக்காடுக்கும் அதிகமான அளவுக்கு கச்சா எண்ணெய் விலை நேற்று உயர்ந்தது. அக்டோபரில் இருந்து பழையபடி உற்பத்தியை தொடங்க எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. வெஸ்ட் டெக்சாஸ் இண்டர்மீடியட் ஜூலை ஒப்பந்தத்தின்படி 77.90 டாலர்களாக உள்ளது. இதில் அமெரிக்க கச்சா எண்ணெய் விலை 8.7% உயர்ந்திருக்கிறது. இதேபோல் பிரெண்ட் ரக கச்சாண் எண்ணெய் ஆகஸ்ட் மாதம் 81.92டாலர்களாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. RBOB கேஸ் நிறுவனத்தின் ஜூலையின் ஒப்பந்தத்தின்படி, எரிவாயுவின் விலை 14.5%உயர்ந்துள்ளது. எண்ணெய் தேவை என்பது ஒரு நாளில் 22லட்சம் பேரல்கள் தற்போது உள்ள நிலையில் அடுத்தாண்டு 18லட்சம் பேரல்களாக குறையவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நடப்பாண்டு உலக பொருளாதார வளர்ச்சி 2.8%ஆகவும், அடுத்தாண்டு 2.9%ஆகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. உலகின் பல நாடுகளிலும் சேவைத்துறை சார்ந்த வளர்ச்சியும், பொருளாதார வளர்ச்சியும் இந்தாண்டின் இரண்டாவது பாதியில் அதிகரிக்கும் என்று ஓபெக் அமைப்பு கணித்துள்ளது. சுற்றுலா சார்ந்த தொழில்களில் எண்ணெய் சார்ந்த பயன்பாடு அதிகரிக்கும் என்று .கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பணவீக்கம் தொடர்பான தரவுகளும், சர்வதேச ஆற்றல் முகமையின் புள்ளி விவரங்களும் இன்று வெளியாகும் நிலையில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.