விடாமல் அசத்தும் டாடா மோட்டார்ஸ் …
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரிட்டன் பிரிவு வணிகமான ஜாகுவார் லேண்ட் ரோவர் தனது 2024 ஆண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் 430 அடிப்படை புள்ளிகள் ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சீனாவிலும் டாடா நிறுவனத்தின் கூட்டு நிறுவனங்களின் சிக்கன நடவடிக்கைகளால் நல்ல லாபம் கிடைக்கும் என்றும் கணிக்கப்படுகிறது. 2025 நிதியாண்டில் பயணிகள் வாகனம் மற்றும் வணிக வாகனங்களின் பிரிவு சிறப்பாக செயல்படும் என்றும், வணிக ரீதியில் ஜாகுவார் லேண்ட் ரோவர் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளதாகவும் கோடக் ஈக்விட்டீஸ் நிறுவனம் கூறுகிறது. எஸ்யுவி ரகத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ரேஞ்ச் ரோவர் டிஃபெண்டர் ஆகிய கார்களின் விற்பனை 79 விழுக்காடாக உயர்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ரேஞ்ச் ரோவர், டிஃபெண்டர், டிஸ்கவரி, ஜாகுவார் ஆகிய 4 ரகமான கார்களை தயாரிக்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மின்சார கார்கள் மற்றும் உள்ளீட்டு கம்பஷன் இன்ஜின்கள் என இரண்டு பிரிவுகளாக உற்பத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஜாகுவார் லேண்ட் ரோவரின் நிகர மதிப்பு 2024 நிதியாண்டில் 2.6 பில்லியன் பவுண்டுகளில் இருந்து தற்போது 5.6 பில்லியன் பவுண்டுகளாக இருப்பதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. டாடா மோட்டார்ஸின் அட்டகாசமான வணிக தரவுகளை வைத்து 2025-27 காலகட்டத்தில் நிச்சயமாக டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்குகளை வாங்கலாம் என்றும் ஆயிரத்து 100 ரூபாய் வரையிலான அளவில் டாடாமோட்டர்ஸ் நிறுவனத்துக்கு பங்குச்சந்தைநிபுணர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்