இந்த திறமை இருந்தால் பணம் வரும்..
உலகின் பெரிய பணக்காரர்களில் ஒருவரான வாரன் பஃபெட், அண்மையில் பேச்சுத்திறமை குறித்து இளம் தலைமுறையினருக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார். கம்யூனிகேஷன் ஸ்கில் எனப்படும் திறமை வளர்ந்தால் அது வருங்காலங்களில் பணத்தை அதிகரிக்க உதவும் என்றும் தெரிவித்துள்ளார். பொதுவெளியில் எப்படி பேச வேண்டும் என்று தாம் கற்றுக்கொண்ட விஷயம் தனது வாழ்க்கையை மாற்றியதாகவும் வாரன் குறிப்பிட்டுள்ளார். தனது வாழ்வில் தாம் செலவழித்த 100 டாலர் மதிப்புள்ள கோர்ஸ்தான் தனக்கு மிகவும் உதவியதாகவும் அவர் கூறியுள்ளார். அந்த வகுப்பு முடிந்ததும் ஆசிரியர் பணியையும் அவர் தேர்ந்தெடுத்தார். பொதுவாக மக்கள் மத்தியில் பேசுவதில் தனக்கு தயக்கம் இருந்ததாக கூறிய வாரன் பஃபெட், குறிப்பிட்ட ஒரு தனிப்பட்ட திறன் மேம்பாட்டு வகுப்பு, தனது வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிட்டதாகவும் கூறியுள்ளார். 93 வயதாகும் வாரன் பஃபெட் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வதில் சிறந்து விளங்குகிறார். அதே நேரம் பெர்க்ஷைர் ஹாத்வே நிறுவனத்தையும் அவர் நிர்வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.