அசத்திய இந்திய சந்தைகள்
இந்திய பங்குச்சந்தைகளில் ஜூன் 14 ஆம் தேதியான வெள்ளிக்கிழமை மிகப்பெரிய உச்சம் தொடப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 181 புள்ளிகள் உயர்ந்து 76 ஆயிரத்து992 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுற்றது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 66 புள்ளிகள் உயர்ந்து 23 ஆயிரத்து 465 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. வெள்ளிக்கிழமை மட்டும் 2251 பங்குகள் சரிந்தும், 1516 பங்குகள் வீழ்ந்தும்,114 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகத்தை நிறைவு செய்தன. அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவன பங்குகள் 1 விழுக்காடும், EIH Associated Hotels நிறுவன பங்குகள் 6.5 % உயர்ந்தன. புரவன்கரா நிறுவன பங்குகள் ஒரு விழுக்காடு உயர்ந்தது. மகிந்திரா அண்ட் மிகிந்திரா நிறுவன பங்குகள் 2 விழுக்காடு உயர்ந்தன பல்ராம்பூர் சின்னி நிறுவன பங்குகள் 2 விழுக்காடு சரிந்தன. தகவல் தொழில்நுட்பத்துறையில் டிசிஎஸ்,டெக் மகிந்திரா,விப்ரோ, இன்போசிஸ் நிறுவன பங்குகள் தலா 1 விழுக்காடு வரை சரிவை கண்டன. சென்னையில் சனிக்கிழமை 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 440 ரூபாய் விலை உயர்ந்து 53 ஆயிரத்து640 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 55 ரூபாய் விலை உயர்ந்து 6705 ரூபாயாக விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 60 காசுகள் உயர்ந்து 95 ரூபாய் 60 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 600 ரூபாய் கிலோவுக்கு உயர்ந்து 95ஆயிரத்து 600 ரூபாயாக விற்கப்படுகிறது. மேலே சொன்ன விலைகளுடன் செய்கூலி, சேதாரம் என குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படும் அது கடைக்கு கடை மாறுபடும், ஆனால் நிலையான ஜிஎஸ்டியாக 3 விழுக்காடு கண்டிப்பாக அனைத்து நகைகளுக்கும் வசூலிக்கப்படும் என்பதை நகை வாங்குவோர் நினைவில் வைத்துக்கொள்ளவும்