இது வாரனின் அழகிய அறிவரை…
முதலீடு செய்வதில் வல்லவரான வாரன் பஃபெட் அண்மையில் தனது நிறுவன கூட்டத்தில் பேசியது உலகம் முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. 120 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு பணம் வைத்திருக்கும் அவரின் பேச்சை இன்றும் கேட்க திரளான மக்கள் நெப்ராஸ்காவுக்கு படையெடுக்கின்றனர். அப்படி என்ன பேசிவிடுவார் என்று நீங்கள் நினைக்கலாம் ஆனால் விஷயம் இருக்கிறது. அவர் கேள்விகளை எதிர்கொள்ளும் விதம், உடனுக்கு உடன் தரும் பதில்கள் வாழ்க்கையை இன்னும் மேம்படுத்த உதவும் வகையில்தான் அமைவதாக அந்த கூட்டங்களில் பங்கேற்றவர்கள் தெரிவிக்கின்றனர். சார்லியை போலவும் தன்னைப்போலவும் சிறப்பான நண்பர்கள் கிடைப்பது அபூர்வம் என்று கூறிய அவர், சிறப்பான நபர்களை தொடர்ந்து தேடுங்கள் என்றும் அவர் கூறியுள்ளார். சில நேரங்களில் அப்படி தேடுவது பிழையாகலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உங்களைச் சுற்றி எப்போதும் சரியான நபர்களையே வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ள அவர், சரியான முடிவுகளை தரும் பெண்ணை திருமணம் செய்யுங்கள் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். சார்லியுடன் இருந்த மகிழ்ச்சியான நாட்களையும் வாரன் அசைபோட்டார். எவ்வளவு பேர் உங்களை விரும்புகிறார்கள் என்பது மட்டுமே வாழ்க்கையின் வெற்றி என்று குறிப்பிட்டுள்ள வாரன், நல்ல நட்பு வட்டாரத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். அன்பை அதிகம் பகிர்ந்தால்தான் அன்பு அதிகம் உங்களுக்கு கிடைக்கும் என்றும் அவர் தத்துவம் பேசினார்.