ஜியோவின் அதிரடி உயர்வு..
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும், டி எம் ஃபோரம் என்ற நிறுவனமும் இணைந்து 80 விழுக்காடு வரை அதிக கூட்டு பங்களிப்பை தந்திருப்பதாக ஜியோ நிறுவனத்தின் தலைவர் ஆகாஷ் அம்பானி கூறியுள்ளார். டி எம் ஃபோரம் கண்டுபிடிப்பு ஹப் கடந்தாண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்டது. அது முதல் இதுவரை அந்த கூட்டு முயற்சி அட்டகாசமாக வளர்ந்து வருவதாக ஆகாஷ் குறிப்பிட்டார். இந்த கூட்டில் மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட நிறுவனங்களையும் சேர்க்க விரும்புவதாகவும் ஆகாஷ் அம்பானி குறிப்பிட்டார். டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் நடந்த கருத்தரங்கில் ஆகாஷ் அம்பானி காணொலி வாயிலாக பங்கேற்றபோது இந்த மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்தினார். ஜெனரேட்டிவ் ஏஐ மற்றும் லார்ஜ் லாங்குவேஜ் மாடல்கள் உள்ளிட்டவையும், திறந்தநிலை டிஜிட்டல் கட்டமைப்புகளையும் பிராதனமாக கொண்டதாக இந்த நிறுவனம் அமைந்திருக்கிறது. இந்த கூட்டு நிறுவனம் நவி மும்பையில் ரிலையன்ஸ் கார்பரேட் ஐடி பூங்காவில் அமைந்திருக்கிறது. இந்த கூட்டு நிறுவனத்தில் அக்சென்சர், டாயிட்ச் டெலிகாம், கூகுள், ஆரஞ்ச், ஜியோ, டெலிநார், வோடஃபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து செயல்படுகின்றன. இந்த கூட்டு செயல்கூட்டத்தின் முதல் கட்டம் மார்ச்சில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் புதிய திட்டத்தையும் அந்த நிறுவனம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.