ஐரோப்பா அதிரடி..
அண்மையில் எழுந்த புகாரை அடுத்து ஐரோப்பிய யுனியன் நிர்வாகிகள் 10க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்களில் ஆராய்ச்சியை செய்தனர். அதில் எச்எப்சிஎல் நிறுவனத்தைத் தவிர்த்து மற்ற அனைத்து 10 நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கியுள்ளது. ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ் மற்றும் ஸ்டெர்லைட் டெக் கேபிள்ஸ் சொல்யூசன்ஸ் ஆகிய நிறுவனத்துக்கு அதிபட்ச வரியாக 11.4 விழுக்காடு வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக பிர்லா கேபிள்ஸ், யுவர்சல் கேபிள்ஸ், விந்தியா டெலிலிங்க்ஸ் நிறுவனம் ஆகிய நிறுவனங்களுக்கு வரியாக 8.7விழுக்காடு வரி விதிக்கப்படுகிறது. ZTT India, UM Cables, Aksh Optifibre, Apar Industries, Polycab India, Aberdare Technologies ஆகிய நிறுவனங்களுக்கு 9.9 விழுக்காடு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கடந்த 14 ஆம் தேதி நோட்டீசும் அளிக்கப்பட்டுள்ளது. கண்ணாடி இழை கம்பிகள் உற்பத்தியில் 20ஆண்டுகளாக உள்ள தங்கள் நிறுவனம்விதிமீறல்களில் ஈடுபடுவதில்லை என்று ஸ்டெர்லைட் நிறுவனம் தெரி வித்துள்ளது. குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு ஆண்டி டம்பிங் வரி வசூலிக்கப்படாது என்றும் ஐரோப்பிய யூனியன் அதிகாரிகள் தெரிவித்துள்ளன. உற்பத்தியை விட குறைவான விலைக்கு விற்றாலோ,அல்லது சொந்த நாட்டு உற்பத்தியை விட குறைவான விலைக்கு விற்றாலோ சில நேரங்களில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கண்ணாடி இழை கம்பிகள் உற்பத்தியில் மட்டும் 2024 நிதியாண்டில் 39 ஆயிரத்து 600 கோடி ரூபாய் என்று புள்ளி விவரம் கூறுகிறது. இந்தியாவில் இருந்து ஸ்பெயின், நெதர்லாந்து, போலந்து, இத்தாலி ஆகிய நாடுகளுக்கு கண்ணாடி இழை கம்பிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் 5ஜி சேவைகள் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் குறைவான பணியாளர்களின் சம்பளம் காரணமாக அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஐரோப்பிய சந்தையில் இந்திய நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.