வருமான வரி குறைக்கப்படுகிறதா?
தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி அமைந்த பிறகு தாக்கல் செய்யப்பட போகும் முதல் பட்ஜெட் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பட்ஜெட்டில் சில சலுகைகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய வருமான வரி அளவுகள் அமலாக இருக்கிறது. இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், நடுத்தர மக்களின் சேமிப்புகளை அதிகரிக்கவும் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இடம்பிடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 15 லட்சம் ரூபாய்க்கும் அதிகம் சம்பாதிக்கும் மக்களுக்கு வருமான வரியில் புதிய சலுகைகள் கிடைக்கும் என்று தகவல் கசிந்திருக்கிறது. பழைய வரி செலுத்தும் முறையில் தற்போது வரை 10லட்சம் ரூபாய்க்கு மேல் சென்றால் 30 விழுக்காடு வரி செலுத்த வேண்டியுள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.2 விழுக்காடாக இருந்த போது 2023-24 நிகியாண்டில் மக்களின் நுகர்வு திறன் பாதியாக உயர்ந்தது. தேர்தல் முடிந்துள்ள நிலையில் பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை மற்றும் வருவாய் சரிவு குறித்து மக்கள் கவலையடைந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த பிரதமர் மோடி, கடந்த 2020-ல் வருமான வரியில் புதிய முறையை அறிமுகப்படுத்தியது. அதன்படி 5 விழுக்காடு வரை 20 விழுக்காடு வரை பல்வேறு கட்டங்களாக வருமான வரி வசூலிக்கப்படுகிறது. தனிநபரின் வருமானம் 3 லட்சத்தில் இருந்து சராசரியாக 15 லட்சம் ரூபாயாக உயர்ந்திருக்கிறது. இதனால் வருமான வரியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறையை 2025 நிதியாண்டில் 5.1 விழுக்காடாக குறைக்க மத்திய அரசு இளக்கு நிர்ணயித்துள்ளது.