ஜியோ சேவை பாதிப்பு..
இந்தியா முழுவதும் ஜியோவின் சிம்கார்டு சேவை பல இடங்களில் பாதிக்கப்பட்டதால் மக்கள் அவதியடைந்தனர்.
இதனால் மக்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த முடியாமல் திண்டாடினர். டவுன்டிடக்டர் என்ற இணையதள தரவுகளின்படி, 54 விழுக்காடு மக்கள் மொபைல் இண்டர்நெட் பிரச்சனையை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.
38 விழுக்காடு மக்கள் ஜியோ பைபர் சேவையில் குறைபாடு இருப்பதாக தெரிவித்தனர். 7 விழுக்காடு மக்கள் மொபைல் நெட்வொர்க்கில் பிரச்சனை இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர். இந்த பாதிப்பு ஏற்பட்டது ஏன் என இதுவரை விளக்கம் அளிக்கப்படவில்லை. சண்டிகர், சென்னை, கவுஹாத்தி உள்ளிட்ட பிரதான நகரங்களில் இந்த பாதிப்பு காணப்பட்டது.
ஜியோவின் இணைய சேவை பாதிப்பு குறித்து நெட்டிசன்கள் மீம்ஸ்களையும் தட்டிவிட்டு கேலி செய்து வருகின்றனர். ஒரு காலத்தில் இலவசமாக அளிக்கப்பட்ட ஜியோ சிம்கார்டு சேவை இப்போது பணம் கொடுத்த பின்னர் சரியாக இல்லை என்று வாடிக்கையாளர்களை கலக்கமடைய வைத்துள்ளது.