பொருளாதாரத்தில் வலுவடையும் இந்தியா…
பொருளாதாரத்தில் இந்தியா மிகப்பெரிய வலுவான நிலையில் இருப்பதாக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் கூறியுள்ளார். நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டின் புள்ளி விவவரம் மிகவும் லாபகரமாக சாதகமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். முன்னதாக 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் உள் நாட்டு வளர்ச்சி 7 விழுக்காட்டில் இருந்து 7.2 ஆக உயரும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் முதல் காலாண்டில் 7.3, இரண்டில் 7.2, மூன்றாவது காலாண்டில் 7.3, கடைசி காலாண்டில் 7.2 ஆக இருக்கும் என்றும் கூறினார். இந்தியாவில் தனியார் பங்களிப்பு மீண்டு வருவதாகவும், கிராமபுற தேவைகள் அதிகமாகியுள்ளதாகவும், பருவமழை இயல்பான அளவில் இருக்கும் என்றும் காரீஃப் பருவ விளைச்சல் நல்லபடியாக இருக்குமென வானிலை ஆய்வு மையங்களும் கருத்து தெரிவித்துள்ளதை சக்தி காந்ததாஸ் சுட்டிக்காட்டியுள்ளார். மார்ச்-ஏப்ரல் காலகட்டத்தில் சில்லறை பணவீக்கம் குறைந்திருப்பதாகவும் ஆனால் அதே நேரம் உணவு விலைவாசி தொடர்ந்து ஏறுமுகத்தில்தான் இருப்பதாகவும் சக்தி காந்ததாஸ் கூறியுள்ளார். முன்னதாக 7.2 விழுக்காடு நாட்டின் வளர்ச்சி இருக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில் அது தற்போது 7.3 விழுக்காடாக இருக்கலாம் என்றும் சக்தி காந்ததாஸ் கூறியுள்ளார்.