டாடா வாகன விலை ஏறப்போகுது..
பட்டி தொட்டி எல்லாம் பிரபலமான கார் நிறுவனம் என்றால் அது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை சொல்லலாம். இந்த நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் வணிக பயன்பாட்டு வாகனங்களின் விலை 2 விழுக்காடு வரை உயர்த்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வணிக பயன்பாட்டு வாகனங்களின் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்து வருவதால் இந்த விலையுயர்வு தவிர்க்க முடியவில்லை என்று கூறப்பட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்குகள் 658 ரூபாயாக உள்ளது. பாரபட்சமே இல்லாமல் அனைத்து தரப்பு வணிக வாகனங்களுக்கும் இந்த விலை உயர்வு பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் இது 3 ஆவது விலையுயர்வாகும். கடந்த ஏப்ரலில்தான் 2 விழுக்காடு வரை விலை உயர்த்தப்பட்டது.இதற்கும் முன்பாக கடந்த ஜனவரியில்தான் 3 விழுக்காடு வரை வணிக வாகனங்கள் விலை உயர்த்தப்பட்டது. வணிக வாகனங்கள் மட்டுமில்லை, பஞ்ச்,நெக்சான், ஹாரியர் உள்ளிட்ட பயணிகள் வாகனங்களின் விலையும் கடந்த பிப்ரவரியில் 0.7விழுக்காடு உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.