ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது,…
ஃபியூச்சர்ஸ் அண்ட் ஆஃப்சன்ஸ் என்ற வசதியை தொடர்ந்து கண்காணிப்பதாக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் கூறியுள்ளார். ரிசர்வ் வங்கி மட்டுமின்றி பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபியும் கண்காணிக்கும் பணியை செய்யும் என்றும் சக்தி காந்ததாஸ் கூறியுள்ளார். நிதி நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சி குழு சார்பில் நடந்த கூட்டத்தில் இந்த இரு அமைப்பின் தலைவர்களும் சந்தித்து பேசிக்கொண்டனர். ஆப்சன்ஸ் மற்றும் பியூச்சர்ஸ் வகை முதலீடுகள்தான் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் மிகமுக்கிய பங்கு வகிக்கின்றன. இந்திய பொருளாதாரமும், நிதித்துறையும் நிலையாக இருப்பதாக கூறியுள்ள சக்தி காந்ததாஸ், இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 78,8281 பில்லியன் ரூபாயாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. உணவுப்பொருட்கள் விலை மிகக்கடுமையாக உயர்ந்துள்ளதாக கூறியுள்ள அவர், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் பணிக்கு உணவுப்பொருட்கள் விலை மிகப்பெரிய சவாலாக இருப்பதாகவும் கூறியுள்ளார். அண்மையில் நடந்த ரிசர்வ் வங்கி நிதி கொள்கை கூட்டத்தில் இந்தியாவின் ரெபோவிகிதத்தை மாற்றாமல் அப்படியே தொடர்கிறது. மேலும் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியை 7 விழுக்காட்டில் இருந்து 7.2 விழுக்காடாக உயர்த்துவதாகவும் கணித்துள்ளனர். 2024 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 8.2 விழுக்காடாக இருந்தது. 2025 நிதியாண்டில் இந்தியாவின் பணவீக்கத்தை 4.5 விழுக்காடாக கட்டுக்குள் வைக்க ரிசர்வ் வங்கி கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.