இந்தியாவின் வளர்ச்சியை புகழ்ந்த பிரபலம்..
FMCG எனப்படும் சந்தையில் அதிக வேகமாக விற்கப்படும் பொருட்கள் துறையில், தனக்கு என தனி இடம் பிடித்தது இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனம், இந்த நிறுவனத்தின் தலைவர்களில் ஒருவரான நிதின் அண்மையில் தனது பங்குதாரர்களிடம் மேடையில் பேசினார். அப்போது இந்தியா அசுர வேகத்தில் வளர்ந்து வருவதாகவும், பொதுமக்கள் சம்பாதிக்கும் திறன் அதிகரித்துள்ளதாகவும் கூறினார். எனினும் FMCG துறையில் இந்தியர்களின் சராசரி வருமானம் 50 டாலர்களாக இருக்கிறது என்று கூறிய நிதின், இந்தோனேசியாவில் நம்மை விட 5 மடங்கு அதிகமாக 250 அமெரிக்க டாலர்களை சம்பாதிப்பதாக கூறியுள்ளார். தாய்லாந்தில் இந்த எண்ணிக்கை 350 டாலர்களாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். நகரமயமாவது அதிகரித்துள்ளதால் , FMCG துறையில் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஐஸ்கிரீம் துறையை தனியாக நடத்த உள்ள நிலையில் இயக்குநர்கள் குழு இணைந்து கலந்து பேசி ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
சில துறைகளில் பொருட்களின் விலைகள் கடுமையாக வீழ்ந்திருப்பது வாடிக்கையாளர்களுக்கு நல்ல பலன் தருவதாக கூறிய நிதின், 10 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் வளர்ச்சியை நோக்கி இந்தியா முன்னேறி வருவதாகவும்2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாதான் 3 ஆவது பெரிய பொருளாதார நாடாக மாறும் என்றும் நிதின் குறிப்பிட்டுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவின் வளர்ச்சி மிகப்பெரியதாக இருப்பதாக கூறிய அவர், இந்தியாவின் வளர்ச்சி என்பது அமெரிக்கா, பிரிட்டனைவிடவும் உயர்வாக உள்ளதாகவும், அமெரிக்கா, பிரிட்டனின் வளர்ச்சி 2 விழுக்காடாக இருக்கும் நிலையில் ஜப்பான் 1 விழுக்காடும், சீனா 7 விழுக்காடும் வளர்ச்சி அடைந்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள், சிறந்த டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்கியுள்ளதாகவும், இது பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கை என்றும் நிதின் குறிப்பிட்டுள்ளார்.