ரகுராம் ராஜன் எச்சரிக்கை ..நடந்தது என்ன?
ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநராக இருந்தவர் ரகுராம் ராஜன், இவர் அண்மையில் சமூக வலைதளங்களில் பரவும் ஒரு வீடியோ குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில் குறிப்பிட்ட நிறுவனத்தில் முதலீடு செய்யும்படி தாம் எப்போதும் அறிவுறுத்தியது கிடையாது என்று கூறிய அவர்,இது தொடர்பாக ஏதேனும் வீடியோ வந்தால் அதனை புகாராக அளிக்க வேண்டும் என்று ரகுராம் ராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்., வங்கியில் கொஞ்சம், பங்குகளில் கொஞ்சம், ஈடிஎஃப்பில் கொஞ்சம் என பிரித்து பிரித்து முதலீடு செய்ய வேண்டும் என்றும் ரகுராம் ராஜன் கேட்டுக் கொண்டுள்ளார். நிதியிழப்பு ஏற்படும் அளவுக்கு முதலீடு செய்யும்படி தாம் எப்போதும் அறிவுரைகளை தருவதில்லை என்று கூறிய ராஜன், மோசடி நபர்களின் இந்த திட்டத்துக்கு இரையாக வேண்டாம் என்றும் ரகுராம் ராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்., கடந்தவாரம்தான் டீப் ஃபேக் வீடியோவை பயன்படுத்தி மும்பையைச் சேர்ந்த மருத்துவரிடம் இருந்து 7 லட்சம் ரூபாயை ஒரு கும்பல் ஆட்டைய போட்டிருக்கிறது. அந்த டிப் ஃபேக் வீடியோவில் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி , குறிப்பிட்ட வர்த்தகத்தை மேம்படுத்த பணம் தரும்படி கோரப்பட்டதாக பாதிக்கப்பட்டவர் புகார் அளித்துள்ளார்.