செபி நடவடிக்கைக்கு பிறகு முதலீட்டாளர் என்ன செய்யவேண்டும்?
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் பரஸ்பர நிதி நிறுவனங்களில் ஒன்றாக குவாண்ட் பரஸ்பர நிதி உள்ளது. அண்மையில் இந்த நிறுவனத்தில் செபி திடீர் சோதனை நடத்தியது. ஃபிரண்ட் ரன்னிங் என்ற போலியான முதலீடுகளை இந்நிறுவனம் செய்ததாக புகார் எழுந்த நிலையில் செபி அதிரடி காட்டியது. செபியின் இந்த நடவடிக்கை காரணமாக முதலீட்டாளர்களுக்கு சிறிய அச்சம் ஏற்பட்டது. இந்நிலையில் தரமான பங்குகளை கையாளவே செபி இந்த நடவடிக்கை செய்திருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். Reliance, Jio Financial Services, HDFC Bank, Adani Power, Tata Power, SAIL, LIC,Aurobindo Pharma உள்ளிட்ட நிறுவனங்களில் குவாண்ட் நிறுவனம் முதலீடு செய்திருக்கிறது. இந்நிலையில் செபி விசாரணை இதற்கு முன்பும் சோதனை செய்திருப்பதாகவும் முதலீட்டாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று குவாண்ட் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நிறுவனத்தின் செயல்பாடுதான் ஒரு பங்கின் மதிப்பை தீர்மானிக்கும் என்றும் செபியின் விசாரணை எந்த விதத்திலும் பாதிக்காது என்றும் விளக்கம் தரப்பட்டுள்ளது. இந்நிலையில் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர இருப்பதாகவும், முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீடுகளை செய்யலாம் என்றும் குவாண்ட் நிறுவனம் தெளிவான விளக்கத்தை தந்துள்ளது.