5ஜி ஏலம்-முதல் நாளில் 11,000 கோடி ரூபாய் ஏலம்..
இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை ஏலம் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஒறு சுற்று ஏலம் முடிந்துவிட்ட நிலையில், இரண்டாவது சுற்று ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன் முதல் நாளில் 11,260 கோடி ரூபாய் அளவுக்கு அலைக்கற்றை ஏலமிடப்பட்டுள்ளது. 900 மெகா ஹர்ட்ஸ்,1800 மெகா ஹர்ட்ஸ், 2100மெகா ஹர்ட்ஸ் உள்ளிட்ட அலைக்கற்றைகள் ஏலமிடப்பட்டன. இந்த ஏலத்தில் ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் பங்கேற்றன. பிகார், மேற்குவங்கம், மத்தியபிரதேசம், உத்தரபிரதேசத்திற்கான 1800மெகா ஹர்ட்ஸ் மற்றும் பஞ்சாப் , ராஜஸ்தான், உ.பி.கிழக்கு பகுதிகளுக்கு தேவையான 900 மெகா ஹர்ட்ஸ் மற்றும் அசாம்,ஜம்முகாஷ்மீர் மற்றும்வடகிழக்கு மாநிலங்களுக்கு தேவையான 2100மெகா ஹர்ட்ஸ் அலைக்கற்றைகளும் ஏலமிடப்பட்டன. 2022-ல் நடந்த ஏலத்தில் 1.45லட்சம் கோடி ரூபாய்க்கு 5ஜி அலைக்கற்றை ஏலமிடப்பட்டது. 2 நாட்களில் ஏலம் முடியும் என்று கூறப்பட்ட நிலையில் 7 நாட்கள் வரை ஏலம் நடந்தது. உத்தரபிரதேச கிழக்கு பகுதிக்கான ஏலத்தில் 3 நிறுவனங்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. 10.5ஜிகாஹர்ட்ஸ் அளவுக்கான 5ஜி காற்று அலைவரிசையை மத்திய அரசு ஏலமிட்டுள்ளது. இதற்கு 96ஆயிரத்து 238.45கோடி ரூபாய்க்கு ஏலமிடும் பணிகள் நடக்கின்றன. ஜியோ நிறுவனம் கொல்கத்தா, ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளுக்கான அலைக்கற்றைக்கு ஏற்கனவே முன்பதிவும் செய்து, அதற்கான தொகைகளையும் செலுத்தியுள்ளது.
ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் சந்தை மதிப்பு குறைந்துள்ள நிலையில் , ரிலையன்ஸ் ஜியோவின் சந்தை மதிப்பு மட்டும் 0.9% உயர்ந்து முடிந்துள்ளது. ஜியோவின் ஒரு பங்கின் விலை ரூ. 2908 ரூபாயாக உயர்ந்திருக்கிறது.