புதிய உச்சம் தொட்ட சந்தைகள்
இந்திய பங்குச்சந்தைகளில் ஜூன் 25 ஆம் தேதியான செவ்வாய்க்கிழமை சூப்பரான ஏற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 712புள்ளிகள் உயர்ந்து 78 ஆயிரத்து 53 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 183புள்ளிகள் உயர்ந்து 23 ஆயிரத்து 721 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. இந்தியாவில் நடப்புக் கணக்கு அதிகரிப்பு மற்றும் 2023-24 நிதியாண்டின் கடைசி காலாண்டு முடிவுகள் வெளியிடப்பட்டதால் பங்குச்சந்தைகளில் ஏற்றம் காணப்பட்டது. வங்கி மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் பெரிய ஏற்றம் கண்டன. Axis Bank, HDFC Bank, ICICI Bank உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபம் கண்டன. ரியல் எஸ்டேட், உலோகம், ஊடகத்துறை பங்குகள் நஷ்டம் கண்டன. சென்னையில் செவ்வாய் கிழமை, 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 160ரூபாய் விலை குறைந்தது. 53 ஆயிரத்து 440ரூபாயாக உள்ளது. ஒரு கிராம் தங்கம் 20 ரூபாய் விலை குறைந்து 6680 ரூபாயாக விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 70 காசுகள் குறைந்து 95 ரூபாய் 50 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை 700 ரூபாய் கிலோவுக்கு குறைந்து 95ஆயிரத்து 500 ரூபாயாக விற்கப்படுகிறது. மேலே சொன்ன விலைகளுடன் செய்கூலி, சேதாரம் என குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படும் அது கடைக்கு கடை மாறுபடும், ஆனால் நிலையான ஜிஎஸ்டியாக 3 விழுக்காடு கண்டிப்பாக அனைத்து நகைகளுக்கும் வசூலிக்கப்படும் என்பதை நகை வாங்குவோர் நினைவில் வைத்துக்கொள்ளவும்