ஏறுமுகத்தில் ஏத்தர் நிறுவன பணிகள்..
மின்சார ஸ்கூட்டர்கள் உற்பத்தியில் தனித்துவமான நிறுவனமாக வலம் வருவது ஏத்தர் நிறுவனம். இந்த நிறுவனம் தனது வணிகத்தை வளர்க்க ஆரம்ப பங்கு வெளியீட்டுக்கான முயற்சிகளை செய்து வருகிறது. இதையடுத்து ஏத்தர் நிறுவனம் பொதுத்துறை நிறுவனமாக மாற்றியுள்ளது. இதற்கான ஒப்புதலை அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு அளித்துள்ளது.
முதலீட்டாளர்கள் மத்தியில் 750 கோடி ரூபாய் முதலீடுகள் திரட்டவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆரம்ப பங்கு வெளியீட்டை செய்வதற்காக அந்த நிறுவனம், முன்னணி நிதி நிறுவனங்களான ஜேபி மார்கன், எச்எஸ்பிசி நோமுரா உள்ளிட்ட நிறுவனங்களை பரிசீலித்து வருகிறது. ஏத்தர் நிறுவன பங்குகளில் 2.2 விழுக்காடு பங்குகளை ஹீரோ நிறுவனத்துக்கு சச்சின் பன்சால் விற்றார். அதுவும் 124 கோடி ரூபாய் என்ற தொகைக்கு விற்பனை செய்தார். மீதமுள்ளதை ஜீரோதா நிறுவனத்தின் நிகில் காமத்திடம் விற்பனை செய்யப்பட்டது. தற்போது வரை ஏத்தர் நிறுவனத்தின் பங்குகள் தற்போது ஹிரோ மோட்டோ கார்ப் நிறுவனத்திடம் 40 விழுக்காடு அளவுக்கு உள்ளது. கடந்த மே மாதம் 286 கோடி ரூபாயை அந்நிறுவனத்தின் நிறுவனர்களிடம் இருந்து பெற்ற நிர்வாகிகள் கடன் மற்றும் ஈக்விட்டி வாயிலாக அதனை மாற்றினர். ஏத்தர் நிறுவனத்தின் டர்ன் ஓவர் என்பது ஆயிரத்து 753 கோடி ரூபாயாக 2024 நிதியாண்டில் உள்ளது. இது மொத்த செலவான 1,784 கோடியை விட 1.7 விழுக்காடு குறைவாகும், கடந்த 2023 நிதியாண்டில் ஏத்தர் நிறுவனம் 864 கோடிரூபாய் நஷ்டமடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.