1 மணி நேரத்தில் டெலிவரி திட்டம்-ரிலையன்ஸ் அதிரடி..
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பிரிவான ரிலையன்ஸ் ரீட்டெயில் நிறுவனம் வீட்டு உபயோக பொருட்களை 1 மணி நேரத்தில் வீட்டில் டெலிவரி செய்யும் திட்டத்தை 2 நகரங்களில் சோதனை செய்து பார்த்துவருகிறது. முதல் கட்டமாக மும்பை மற்றும் நவி மும்பையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. காய்கனிகளையும்,வீட்டு உபயோகப்பொருட்களையும் அதிகளவில் டெலிவரி செய்ய ரிலையன்ஸ் ரீட்டெயில் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. கடந்தாண்டும் இதே பாணியில் ஜியோ மார்ட் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் பணிகள் சோதித்துப்பார்க்கப்பட்டன. முதல்கட்டமாக 1 மணி நேரத்துக்குள் டெலிவரி செய்யும் திட்டம் செயல்பாட்டிற்கு வரும் என்றும், இது சரிபடும்பட்சத்தில் 30 முதல் 45 நிமிடங்களில் பொருட்களை டெலிவரி செய்ய ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போது வரை ரிலையன்ஸில் ஆர்டர் செய்யும் பொருட்கள் 12 மணி நேரம் முதல் அதிகபட்சமாக 3 நாட்கள் வரை கூட ஆகிறது. உள்ளூர் பெட்டிக்கடைகள் மற்றும் ஜியோ மார்ட்டுடன் இணைந்து விரைவாக பொருட்களை டெலிவரி செய்ய பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்த திட்டம் வெற்றிபெறும்பட்சத்தில் மின்சாதன பொருட்களையும் இதே பாணியில் டெலிவரி செய்ய ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளது.