சந்தைகளில் சரிவு..
இந்திய பங்குச்சந்தைகளில் ஜூன் 28 ஆம் தேதியான வெள்ளிக்கிழமை பங்குச்சந்தைகளில் லேசான சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 210புள்ளிகள் சரிந்து 79 ,032 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 33புள்ளிகள் சரிந்து 24,010 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. ONGC, Dr Reddy’s Labs, Reliance Industries, SBI Life Insurance, Tata Motors உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபம் கண்டன. IndusInd Bank, Bharti Airtel, Axis Bank, ICICI Bank, Kotak Mahindra Bank நிறுவன பங்குகள் சரிவை கண்டன. சுகாதாரத்துறை, உலோகம், பொதுத்துறை வங்கிகள், எண்ணெய் நிறுவன பங்குகள் அரை முதல் 1 விழுக்காடு வரை ஏற்றம் கண்டன. வங்கித்துறை பங்குகளின் குறியீடு 1 விழுக்காடு வரை சரிந்தன. Tech Mahindra, Reliance Industries, JSW Steel, Bharti Airtel, Divis Lab, Grasim Industries, Indraprastha Gas, Godrej Properties, Oil India, LIC Housing, Biocon, PB Fintech, Bombay Burmah, Mahanagar Gas, Muthoot Finance, Vodafone Ideaஉள்ளிட்ட 260நிறுவன பங்குகள் 52 வாரங்களில் இல்லாத புதிய உச்சம் தொட்டன. சென்னையில் வெள்ளிக் கிழமை, 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 328ரூபாய் விலை உயர்ந்தது. 53 ஆயிரத்து 328ரூபாயாக உள்ளது. ஒரு கிராம் தங்கம் 41 ரூபாய் விலை உயர்ந்து. 6666 ரூபாயாக விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி மாற்றமின்றி 94 ரூபாய் 50 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளி கிலோ 94ஆயிரத்து 500 ரூபாயாக விற்கப்படுகிறது. மேலே சொன்ன விலைகளுடன் செய்கூலி, சேதாரம் என குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படும் அது கடைக்கு கடை மாறுபடும், ஆனால் நிலையான ஜிஎஸ்டியாக 3 விழுக்காடு கண்டிப்பாக அனைத்து நகைகளுக்கும் வசூலிக்கப்படும் என்பதை நகை வாங்குவோர் நினைவில் வைத்துக்கொள்ளவும்.