நிதியமைச்சகத்துக்கு வங்கிகள் கடிதம்..
வட்டார கிராம வங்கிகளை , ஸ்பான்சர் வங்கிகளுடன் இணைக்கவேண்டும் என்று 2 வங்கி சங்கங்கள் நிதியமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர். AIBOC,AIBEA ஆகிய இரண்டு சங்கங்கள் எழுதியிருக்கும் கடிதத்தில், செயல்திறனை மேம்படுத்தவும், வட்டார கிராம வங்கிகளின் கட்டமைப்பை சரிசெய்யவும் இதனை செய்ய வேண்டும் என்றும் கோரியிருக்கின்றனர். டெக்னாலஜி வளர்ந்துவிட்ட இந்த நேரத்தில் வட்டார கிராம வங்கிகளையும் தரம் உயர்த்த வேண்டும் என்று பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கான பணிகள் 43 வட்டார கிராமிய வங்கிகள் செய்து வருகின்றன. ஸ்பான்சர் வங்கிகளுடன் இணைத்துவிட்டால் வட்டார கிராம வங்கிகளின் பணியாளர்களுக்கும் திறமைகள் மேம்படும் என்றும், ஆட்கள் பற்றாக்குறை குறையும் என்றும் தெரியவந்துள்ளது. இணைப்பு சாத்தியமாகும்பட்சத்தில் வட்டார கிராம வங்கிகளின் பணியாளர்களின் சம்பளமும் உயரும், அதே நேரம் மேம்படுத்தப்பட்ட பணி சூழலும் உருவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. கிராம வங்கிகளையும் ஸ்பான்சர் வங்கிகளையும் இணைத்தால் நிர்வகிப்பு, பொறுப்புணர்ச்சி ஆகியவை பெரிதும் மாறுபடும் என்று கூறப்படுகிறது. மேலும் டெபாசிட்கள் அதிகரித்து கிராம மக்களுக்கு பெரிதும் பயன்தரும் என்றும் கூறப்படுகிறது. இந்தியாவில் 43 வட்டார கிராமிய வங்கிகள், 12 வணிக வங்கிகள், 22 ஆயிரம் கிளைகளை கொண்டுள்ளன. மேலும் இவர்களிடம் 30 கோடி டெபாசிட் கணக்குகளும், 3 கோடி கடன் கணக்குகளும், 702 மாவட்டங்களில் உள்ளன. வட்டார கிராமிய வங்கிகளில் 92 விழுக்காடு அளவுக்கு கிராமங்கள் மற்றும் இரண்டாம் தர நகரங்களில் உள்ளன. கிராமிய வங்கிகளில் பாதி அளவுக்கு பணம் மத்தியஅரசின் பங்களிப்பு உள்ளது. மீதமுள்ள பாதியில் , 35 விழுக்காடு ஸ்பான்சர் வங்கிகளும், எஞ்சிய 15 விழுக்காடு தொகை மாநில அரசாங்கங்களும் தருவது குறிப்பிடத்தக்கது.