சம்பளம் 1 கோடிப்பே…
சிகரெட் முதல் ஹோட்டல்கள் வரை பல வணிகங்களில் கொடிகட்டி பறக்கும் நிறுவனமாக திகழ்கிறது ஐடிசி நிறுவனம். இந்த நிறுவனத்தின் பணியாளர்களில் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சம்பளம் வாங்கும் பணியாளர்களின் எண்ணிக்கை 2024 நிதியாண்டில் 24.11 %உயர்ந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்கும் 68 பேர் புதிதாக இணைந்துள்ளனர். இவர்களுடன் சேர்த்து கோடீஸ்வர பணியாளர்களின் எண்ணிக்கை 350 ஆக உயர்ந்திருக்கிறது. கடந்த 2022-23 காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 282 ஆக இருந்தது. 6135 கோடி ரூபாயை அந்நிறுவனம், பணியாளர்களுக்காக செலவிட்டுள்ளது. இதில் குறிப்பாக 5352 கோடி ரூபாய் வெறும் சம்பளமாக மட்டுமே வழங்கப்படுகின்றது. இதற்கு முந்தயை ஆண்டில் 4885 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளில் ஐடிசி நிறுவனம் புதிதாக 8 ஆலைகள், 2 ஹோட்டல்களை திறந்துள்ளது 24 நிதியாண்டில் ஐடிசியின் லாபம் மட்டும் 18,753 கோடி ரூபாயில் இருந்து 24.5விழுக்காடு உயர்ந்திருக்கிறது. ஐடிசியில் நிறந்தர பணியாளர்களாக 24,567 பேர் உள்ளனர். ஐடிசியின் தலைமை நிர்வாகியான சஞ்சிவ் பூரிக்கு சம்பளமாக 28.62 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் செயல் இயக்குநர் சுமந்தின் சம்பளம் 13.6 கோடி ரூபாயாக உள்ளது. இந்தியாவில் நெஸ்ட்லே நிறுவனத்துக்கு அடுத்தபடியாக ஐடிசி நிறுவனம்தான் இரண்டாவது பாக்கேஜ்டு உணவு உற்பத்தி நிறுவனமாக இருக்கிறது. பல ஆண்டுகள் சந்தையில் கோலோச்சிய பிரிட்டானியா நிறுவனத்தை ஐடிசி எளிதாக ஊதித்தள்ளியது. இந்தியாவில் நெஸ்ட்லே நிறுவனம் 2024ஆம் ஆண்டில் 24,275 கோடி ரூபாய் அளவுக்கு பொருட்களை விற்றுள்ளன. இதற்கு அடுத்த இடத்தில் தற்போது ஐடிசி உள்ளது. இந்தியாவில் 17,194 கேடு ரூபாய் அளவுக்கு உணவுப் பொருட்களை ஐடிசி விற்றுள்ளது.