பிரிட்டானியாவை தூக்கிச் சாப்பிட்ட ஐடிசி..,
பல ஆண்டுகளாக உணவுத்துறையில் உள்ள பிரட்டானியாவையே பின்னுக்குத் தள்ளி ஐடிசி நிறுவனம் இந்தியாவின் இரண்டாவது பெரிய உணவு நிறுவனமாக உருவெடுத்துள்ளது. உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் சேர்த்து ஐடிசி நிறுவனத்தின் விற்பனை 17,194.5 கோடி ரூபாயாக இருக்கிறது. பிங்கோ, ஆஷிர்வாத் ஆட்டா, சன்ஃபீஸ்ட் பிஸ்கட்ஸ் உள்ளிட்ட தயாரிப்புகளை ஐடிசி உற்பத்தி செய்து வருகிறது. இதே நேரத்தில் பிரிட்டானியா நிறுவனம் தனது வணிகமாக 16,769 கோடி ரூபாய்க்கு பொருட்களை விற்றுள்ளது. உணவு சார்ந்த வணிகத்தில் 2024 நிதியாண்டில் மட்டும் ஐடிசி நிறுவனம் 09 விழுக்காடு வளர்ச்சியை எட்டியுள்ளது. அதே நேரம் பிரிட்டானியா நிறுவனம் வெறும் 2.9விழுக்காடு அளவுக்குத்தான் தனது வணிகத்தை வளர்த்துள்ளது. பிஸ்கட், உப்பு சேர்க்கப்பட்ட தின்பண்டங்கள் விற்பனை 10 விழுக்காடு அடைந்திருப்பதாக ஐடிசி நிறுவனம் கூறியுள்ளது. புதிதாக 100 பொருட்களை சந்தையில் விற்கும் உத்தியே ஐடிசிக்கு நல்ல வருவாய் ஈட்டித்தருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பார்லே, பிரிட்டானியா போன்ற முன்னணி ஜாம்பவான்களை ஆட்டம் காண வைத்த ஐடிசி நிறுவனம் கடந்த செப்டம்பர் 2023-க்கு பிறகுதான் இத்தனை பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது.