வாரனின் சொத்துகள் அடுத்தது என்னாகும்?
பிரபல முதலீட்டாளர் வாரன் பஃப்பெட் தனது சேமிப்புகள் அடுத்து எப்படி நிர்வாகிக்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அதில் தனது மூச்சுக்கு பிறகு தனது குழந்தைகள் 3 பேர் நடத்தி வரும் அறக்கட்டளைக்கு பணத்தை அளிக்க முடிவெடுத்துள்ளதாககூறியுள்ளார். தற்போது வரை பிரபல மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷனுக்குத்தான் வாரன் நல்ல காரியங்களுக்கு பணம் அளித்து உதவி வருகிறார். இந்நிலையில் தனது 3 வாரிசுகளும் தனித்தனியே அறக்கட்டளை அமைத்து நல்லது செய்வார்கள் என்று 100 விழுக்காடு நம்புவதாகவும் வாரன் கூறியுள்ளார். 93 வயதாகும் வாரன் பஃப்பெட், ஹாத்வே பெர்க்ஷர் நிறுவனத்தில் 128 பில்லியன் அமெரிக் டாலர்கள் பங்குகளை வைத்திருக்கிறார். இந்நிலையில் கடந்த 18 ஆண்டுகளாக பல நல்ல விஷயங்களுக்கு வாரன் ஊக்கப்படுத்தியிருப்பதாக நெகிழ்ச்சியுடன் பில்கேட்ஸ் பவுன்டேஷன் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் பெர்க்ஷைர் ஹாத்வே நிறுவனத்தில் வாரனுக்கு 2 லட்சத்து 7 ஆயிரத்து 963 முதல் நிலை பங்குகளும், 2856 பி ரக பங்குகளும் வைத்துள்ளார். உலகம் முழுவதும் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் சர்வதேச நிதியுதவிகளை செய்துவரும் நிலையில் தனது மூச்சுக்கு பிறகு சொத்துகளை நல்லகாரியங்களுக்கு பயன்படுத்த வாரன் தனது குழந்தைகளை நம்பியிருந்தது உலகளவில் கவனம் ஈர்த்திருக்கிறது.