விலையேற்றினாலும் சில பிளான்கள் மாறவில்லை..
இந்தியாவில் செல்போன் சிம்கார்டு சேவை அளிக்கும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அண்மையில் விலைகளை ஏற்றுவதாக அறிவித்திருந்தனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே விலையேற்றம் குறித்த அறிவிப்பை நாம் வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் உயர்த்தப்பட்ட புதிய பிளான்கள் இன்றும் நாளையும் அமலாகிறது. நிலைமை இப்படி இருக்கையில் வாடிக்கையாளர்கள் தங்களைவிட்டு சென்றுவிடக்கூடாது என்ற நோக்கில் புதிய திட்டங்களை தொலை தொடர்பு நிறுவனங்கள் கையில் எடுத்துள்ளனர். குறிப்பாக 365 நாட்கள் வேலிடிட்டி உள்ள நீண்டகால பிளான்களின் விலையில் மாற்றம் பெரிதாக இல்லை. வோடஃபோன், ஜியோ, ஏர்டெல் ஆகிய 3 நிறுவனங்களும் தங்களுக்கென இருக்கும் பிரத்யேக செயலியில் இதற்கான புதிய ஆஃபர்களை அளித்துள்ளனர். குறிப்பாக பேடிஎம் நிறுவனத்திலும் 15-20 விழுக்காடு அளவுக்கு தினசரி ரீசார்ஜ் சலுகை அறிவிக்கப்பட்டு வருகிறது. நீண்டகால ரீசார்ஜ் ஆப்ஷன்களை மக்கள் அதிகம் பேர் தேர்ந்தெடுப்பதும் தெரியவந்துள்ளது. ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்களில் 28 நாட்கள் வேலிடிட்டி ரீசார்ஜ் செய்யும் திட்டம் தான் அதிகம் பேர் பயன்படுத்தி வருகின்றனர். ஜியோவில் 84 நாட்கள் ரீசார்ஜ் தான் ஹிட். விலை உயர்வு காரணமாக 2 சிம்கார்டு பயன்படுத்தி வருவோரில் பெரும்பாலானோர் ஒரு சிம்மை தியாகம் செய்துவருகின்றனர். 2024-ல் சராசரியாக ஒரு சிம்கார்டு நிறுவனம் 191 ரூபாயாக வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலித்து வந்த தொகை தற்போது 220 ரூபாயாக உயர்ந்திருக்கிறது இன்டர்நெட் பயன்படுத்தியே பழகியவர்களுக்கு இந்த விலையேற்றம் ஒரு பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.