புராஜெட் நெக்சஸ் என்றால் என்ன?
இந்தியாவில் வெற்றிகரமாக இயங்கி வரும் யுபிஐ கட்டமைப்பை வெளிநாடுகளுக்கும் விரிவாக்கும் திட்டம் ரிசர்வ் வங்கியிடம் இருக்கிறது. இதற்காக வெளிநாட்டு வங்கிகளுடன் கைகோர்க்கும் திட்டத்துக்கு பெயர்தான் புராஜெக்ட் நெக்சஸ். விரைவாக பணப்பரிமாற்றம் செய்யும் முறை மற்றும் யுபிஐ ஆகியவற்றை இணைக்கும் பணிகளில் ரிசர்வ்வங்கி ஈடுபட்டுள்ளது. விரைவாக பணம் அனுப்பும் எப்பிஎஸ் திட்டம் மலேசியாவுக்கு சொந்தமானதாகும். புராஜெக்ட் நெக்சஸ் என்ற முறைப்படி, இந்தியாவில் உள்ள யுபிஐ பணம் செலுத்தும் முறையை இனி மலேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூரிலும் பயன்படுத்த வழிவகை செய்யப்படுகிறது. இந்திய பணம் செலுத்தும் முறையான யுபிஐயை உலகளவில் பிரபலப்படுத்த இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. நெக்சஸ் திட்டத்தின்படி மலேசியா,சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் இந்தியாவில் பணத்தை மிக எளிதாக அனுப்ப இயலும். புராஜெக்ட் நெக்சஸ் மூலம் நாடு விட்டு நாடு பணம் செலுத்துவது எளிதாகவும், பணத்தை சேமிக்கும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது. இது தொடர்பான ஒப்பந்தம் சுவிட்சர்லாந்தில் கையெழுத்தானது. இந்த திட்டம் வரும் 2026-ல் நடைமுறைக்கு வந்துவிடும்.வருங்காலங்களில் குறிப்பிட்ட நாடுகள் மட்டுமின்றி பிற நாடுகளுக்கும் நெக்சஸ் திட்டத்தில் இடம் தர வாய்ப்பிருப்பதாக ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.