ஹிண்டன்பர்க் கூறுவது என்ன?
இந்திய விதிகளை அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க் மீறியுள்ளதாக அண்மையில் செபி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. தனது தரப்பு விளக்கத்தையும் அண்மையில் ஹிண்டன்பர்க் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் ஹிண்டன்பர்க் நிறுவனம் முதல் முறையாக கோடக் வங்கியின் பெயரை வெளியிட்டுள்ளது. கோடக் மகிந்திரா வங்கிக்கும் அதானி குழும மோசடிக்கும் தொடர்பு இருப்பதாகவும் ஹிண்டன்பர்க் தெரிவித்தது. அதானி குழுமத்தின் மோசடிகளில் கே இந்தியாஎன்ற நிதி மட்டுமே கூறப்பட்டதாகவும், கே இந்தியா என்பது கோடக் நிறுவனம்தான் என்றும் ஹிண்டன்பர்க் குறிப்பிட்டுள்ளது. அதானி குழுமத்தில் முறைகேடுகள் நடந்ததாக 1.5 ஆண்டுகளுக்கு முன்பே குற்றச்சாட்டு தெரிவித்த நிலையில், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அதானி குழுத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்று செபி கூறுவதாக ஹிண்டன்பர்க் சுட்டிக்காட்டியுள்ளது. இதுநாள் வரை தாங்கள் கூறிய புகாரை அதானி குழுமம் நிரூபிக்கவே இல்லை என்று கூறியுள்ள ஹிண்டன்பர்க், கவுதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களின் மோசடியை அம்பலப்படுத்தியது. ஆனால் இதுவரை அது பற்றி அதானி குழுமம் எந்த விளக்கமும் தரவில்லை என்றும் ஹிண்டன்பர்க் கூறியுள்ளது. கோடிக்கணக்கான பணம் எப்படி சட்டவிரோதமாக வந்தது என்று சுட்டிக்காட்டியும் செபி நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ஹிண்டன்பர்க் தனது குற்றச்சாட்டை முடித்தது.