அரபு நாடுகளுக்கும் வருகிறது யுபிஐ…
ஐக்கிய அரபு நாடுகளிலும் இனி எளிதாக யுபிஐ கியு ஆர் கோடு பயன்படுத்தும் வகையில் பணிகளை தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் செய்து வருகிறது. டிஜிட்டல் வணிகத்தை மத்திய கிழக்கு மற்றும் ஆஃப்ரிக்காவில் விரிவுபடுத்தும் நோக்கில் இந்த பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் தீவிரமடையும்பட்சத்தில், இந்திய சுற்றுலா பயணிகளுக்கும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளுக்கு இந்தியர்கள், சுற்றுலாவுக்காக மட்டும் 90லட்சத்து 80 ஆயிரம் பேர் இந்தாண்டு பயணிப்பார்கள் என்று கூறப்படுகிறது.
அதிலும் குறிப்பாக இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மட்டும் 50லட்சத்து 29 ஆயிரம் பேர் பயணிப்பார்கள் என்று தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் தெரிவிக்கிறது. யுபிஐ பணப்பரிவர்த்தனை கழகத்தின் யுபிஐ சேவைகளை பல நாடுகளுக்கும் விரிவுபடுத்துவதற்காக ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு தீவிர முயற்சிகளை செய்து வருகின்றன. ஏற்கனவே யுபிஐ செயலி மூலமாக நேபாளம், இலங்கை, மொரீசியஸ், ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், பிரான்ஸ் மற்றும் பூடானில் பணத்தை இந்தியர்கள் எளிமையாக செலவிட வகை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.